Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 07, புதன்கிழமை
Menaka Mookandi / 2018 ஏப்ரல் 26 , மு.ப. 12:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
1942: மஞ்சுகோ நகரில் இடம்பெற்ற விபத்து ஒன்றில், 1,549 சீன சுரங்கத் தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.
1945: இரண்டாம் உலகப் போர் - நாட்சி, ஜெர்மனியின் கடைசி வெற்றிகரமான தாக்குதல், போட்சன் என்ற இடத்தில் இடம்பெற்றது.
1954: இந்தோனேஷியா, சீனா மற்றும் கொரியாவில் அமைதியைக் கொண்டுவரும் முகமாக, ஜெனீவாவில் அமைதிப்பேச்சுக்கள் ஆரம்பமாயின.
1960: ஏப்ரல் புரட்சியை அடுத்து, தென்கொரியாவின் அரசத் தலைவர் சிங்மான் ரீ, 12 ஆண்டுகள் ஆட்சியின் பின்னர் பதவி விலகினார்.
1962: நாசாவின் ரேஞ்சர் 4 ஆளில்லா விண்கலம், சந்திரனில் மோதியது.
1964: தங்கனீக்கா, சன்சிபார் இரண்டு நாடுகளும் இணைக்கப்பட்டு, தன்சானியா என ஒரு நாடாகியது.
1966: தாஷ்கந்து நகரில், 5.1 ரிஷ்டர் அளவு நிலநடுக்கம் தாக்கியதில், நூற்றுக்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.
1981: ஈழப்போர் - மட்டக்களப்பு - பட்டித்திடல் வயலில் வேலை செய்துகொண்டிருந்த 16 தமிழர்கள், படுகொலை செய்யப்பட்டனர்.
1982: தென் கொரியாவின் முன்னாள் காவற்துறை அதிகாரியொருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், 57 பொது மக்கள் கொல்லப்பட்டனர்.
1986: சோவியத் ஒன்றியம், உக்ரைனின் செர்னோபினில், அணு உலை விபத்து ஏற்பட்டது. உலகின் மிகப்பெரும் அணுவுலை விபத்து இதுவாகும்.
1989: உலக வரலாற்றில் மிகப் பயங்கரமான சுழல்காற்று, பங்களாதேஷின் நடுப்பகுதியத் தாக்கியதில், 1,300 இற்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். 12,000 பேர் காயமடைந்தனர், 80,000 பேர் - வீடுகளை இழந்தனர்.
1994: ஜப்பானில், சீன விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகியதி,ல் அதில் பயணம் செய்த 271 பேரில் 264 பேர் உயிரிழந்தனர்.
2005: 29 ஆண்டுகால இராணுவ ஆக்கிரமிப்புக்குப் பின்னர், சிரியா தனது 14,000 இராணுவத்தினரை, லெபனானில் இருந்து முற்றாக விலக்கிக் கொண்டது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
19 minute ago
24 minute ago