Ilango Bharathy / 2022 செப்டெம்பர் 23 , மு.ப. 12:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
1529: ஒட்டோமான் பேரரசன் முதலாம் சுலைமான், வியட்னா மீது படையெடுத்தான்.
1641: ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான பொருட்களுடன்: தி மேர்ச்சண்ட் ரோயல் என்ற கப்பல் மூழ்கியது.
1799: இலங்கையில், அரச ஆணைப்படி சித்திரவதை, மற்றும் கொடூரமான தண்டனைகள் நிறுத்தப்பட்டன. மதச் சுதந்திரம் அமுலுக்கு வந்தது.
1821: திரிப்பொலீத்சாவை கிரேக்கர்கள் தாக்கியதில், 30,000 துருக்கியர்கள் கொல்லப்பட்டனர்.
1846: நெப்டியூன் கோள், பிரெஞ்சு வானியலாளர் உர்பெயின் ஜோசப் மற்றும் பிரித்தானிய வானியலாளர் ஜோன் அடம்ஸ் ஆகியோரால் கண்டுபிடிக்கப்பட்டது.
1868: புவெர்ட்டோ ரிக்கோவில், ஸ்பானிய ஆட்சியாளருக்கெதிராக கிளர்ச்சி ஆரம்பமானது.
1884: ஹேர்மன் ஹொலரித் கணிப்பானுக்கான காப்புரிமம் பெற்றார்.
1889: நின்டெண்டோ கம்பனி ஆரம்பிக்கப்பட்டது.
1932: ஹெஜாஸ் மற்றும் நெஜிட் ஆகிய மன்னராட்சிகள் சவூதி அரேபியா என்ற பெயரில் இணைந்தன.
1941: நாசிகளின் அவுஷ்விட்ஸ் வதை முகாமில் நச்சுவாயுக் கொலைகள் முதற்தடவையாகப் பரிசோதிக்கப்பட்டன.
1965: இந்திய - பாகிஸ்தான் போர், 1965 முடிவுக்கு வந்தது.
1966: நாசாவின் சேர்வெயர் 2 விண்கலம் சந்திரனின் கோர்ப்பனிக்கஸ் என்ற இடத்தில் மோதியது.
1980: பாடகர் பொப் மார்லி தனது கடைசி நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.
1983: இலங்கை மட்டக்களப்பு சிறைச்சாலையில் சிறைவைக்கப்பட்டிருந்த தமிழ் அரசியற் கைதிகள் சிறையை உடைத்துத் தப்பித்தனர்.
1986: கொழும்பில் தேசிய இயற்கை வரலாற்று நூதன சாலை, பொதுமக்கள் பார்வைக்காகத் திறந்துவைக்கப்பட்டது.
2002: மோஸிலா பயர் பொக்ஸ், இணைய உலாவி வெளிவந்தது.
2004: ஹெயிட்டியில் சூறாவளி மற்றும் வெள்ளம் காரணமாக 1,070 பேர் கொல்லப்பட்டனர்.
7 hours ago
05 Nov 2025
05 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
05 Nov 2025
05 Nov 2025