2025 செப்டெம்பர் 15, திங்கட்கிழமை

வரலாற்றில் இன்று: செப்டெம்பர் 29

Ilango Bharathy   / 2022 செப்டெம்பர் 29 , மு.ப. 12:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

1567 – பிரான்சில் இரண்டாம் சமயப் போர் ஆரம்பமானது.

1885 – உலகின் முதலாவது மின்சார திராம் வண்டி இங்கிலாந்தில் பிளாக்பூல் நகரில் சேவையை ஆரம்பித்தது.

1911 – இத்தாலி ஒட்டோமான் பேராட்சிக்கெதிராகப் போர் தொடுத்தது.

1916 – ஜோன் ரொக்பெல்லர் உலகின் முதலாவது கோடீசுவரர் ஆனார்.

1962 – கானடாவின் முதலாவது செய்மதி அலூட் 1 ஏவப்பட்டது.

1971 – அரபுக் கூட்டமைப்பில் ஓமான் இணைந்து கொண்டது.

1972 – ஜப்பான் மக்கள் சீனக் குடியரசுடனான தூதரக உறவை மீள அமைத்து, சீனக் குடியரசுடனான உறவை முறித்துக் கொண்டது.

1991 – எயிட்டியில் இராணுவப் புரட்சி இடம்பெற்றது.

1993 – மகாராஷ்டிரா மாநிலத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 10,000 பேர் உயிரிழந்தனர்.

1998 – இலங்கை, பலாலி விமானநிலையத்தில் இருந்து இரத்மலானை நோக்கி 56 பேருடன் புறப்பட்ட லயன் எயார் பயணிகள் விமானம் புறப்பட்டு 10 நிமிடங்களில் காணாமல் போனது.

2003 –ஜுவான் சூறாவளி கனடாவின் ஹாலிபாக்ஸ் துறைமுகத்தைத் தாக்கிப் பேரழிவை விளைவித்தது.

 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .