R.Tharaniya / 2025 மே 12 , பி.ப. 03:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
1551: அமெரிக்க கண்டத்தின் மிகப் பழைமையான பல்கலைக்கழகமான சான் மார்கோஸ் தேசிய பல்கலைக்கழகம் பெரு நாட்டின் லீமா நகரில் ஸ்தாபிக்கப்பட்டது.
1797: வெனிஸ் நகரை நெப்போலியன் வென்றார்.
1942: நாஜி படைகளால் அஸ்ச்விட்ஸ் காஸ் வதை முகாமுக்கு 1500 யூதர்கள் அனுப்பப்பட்டனர்.
1949: பேர்லின் முற்றுகையை சோவியத் யூனியன் தளர்த்தியது.
1949: ஜேர்மனியின் மேற்குப் பகுதியை தக்கவைத்திருந்த மேற்குலக நாடுகள் மேற்கு ஜேர்மனி எனும் புதிய நாட்டுக்கான அடிப்படை சட்டங்களை அங்கீகரித்தன.
1952: ஜோத் மகாராஜா காஜ் சிங் முடிசூடினார்.
1955: சிங்கப்பூரில் பஸ் ஊழியர்களின் பகிஷ்கரிப்பை தொடர்ந்து பாரிய கலவரம் ஏற்பட்டது.
2002: அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜிம்மி கார்ட்டர் கியூபாவுக்கு விஜயம் செய்தார். கியூபாவில் 1959ஆம் ஆண்டு ஏற்பட்ட புரட்சியின்பின் அந்நாட்டுக்கு அமெரிக்க ஜனாதிபதியாக பதவி வகித்த ஒருவர் விஜயம் செய்தமை அதுவே முதல் தடவையாகும்.
2003: சவூதி அரேபியாவின் ரியாத் நகரில் அல் கயீடாவின் தாக்குதலில் 26 பேர் பலி.
2007: பாகிஸ்தானின் கராச்சியில் ஏற்பட்ட வன்முறையில் சுமார் 50 பேர் பலி, 100 பேர் காயம்.
2008: சீனாவின் சிச்சுவான் பிராந்தியத்தில் ஏற்பட்ட பூகம்பத்தினால் சுமார் 69,000 பேர் பலி.
2008: அமெரிக்காவில் வேலைத் தளங்களில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல்களின்போது, சட்டவிரோத குடியேற்றவாசிகள் 400 பேர் கைதுசெய்யப்பட்டனர்.
12 minute ago
17 minute ago
27 minute ago
40 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
17 minute ago
27 minute ago
40 minute ago