Janu / 2026 மே 14 , பி.ப. 09:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
1900: கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுக்கள் பாரிசில் ஆரம்பமாயின.
1931: சுவீடனில், தொழிற்சங்க உறுப்பினர்களின் ஆர்ப்பாட்டத்தைக் கலைக்க, பொலிஸார் துப்பாக்கிச்சூடு நடத்தியதில், 5 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.
1939: பெருவைச் சேர்ந்த 5 வயது நிரம்பிய லீனா மெதினா, உலகின் முதலாவது வயதில் குறைந்த தாயாக அறிவிக்கப்பட்டார்.
1948: இஸ்ரேல், தன்னைத் தனிநாடாகப் பிரகடனப்படுத்தி, தற்காலிக அரசாங்கத்தையும் அறிவித்தது. இதனால், அரபு நாடுகள், இஸ்ரேலைத் தாக்கத் தொடங்கின. அரபு - இசுரேல் போர் ஆரம்பமானது.
1955: பனிப்போர் - சோவியத் ஒன்றியம் உட்பட எட்டு கம்யூனிச நாடுகள் இணைந்து, வார்சா உடன்பாடு எனப்படும் தற்காப்பு ஒப்பந்ததில் கையெழுத்திட்டன.
1965: இலங்கையில், ரோஹண வீஜயவீரவினால், மக்கள் விடுதலை முன்னணி என்னும் அரசியல் கட்சி ஆரம்பிக்கப்பட்டது.
1973: ஸ்கைலேப் என்ற ஐக்கிய அமெரிக்காவின் முதலாவது விண்வெளி நிலையம், விண்ணுக்கு ஏவப்பட்டது.
1976: யாழ்ப்பாணத்தின் வட்டுக்கோட்டையில் நடந்த தமிழர் விடுதலைக் கூட்டணியின் கட்சி மாநாட்டில்தமிழீழப் பிரகடனம் வெளியிடப்பட்டது.
1988: ஐக்கிய அமெரிக்காவின் கென்டக்கி மாநிலத்தில் இடம்பெற்ற பஸ் விபத்தில், 27 பேர் உயிரிழந்தனர்.
2004: டென்மார்க்கின் முடிக்குரிய இளவரசர் பிரெட்ரிக், அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த "மேரி டொனால்ட்சன்" என்னும் பெண்ணைத் திருமணம் செய்துகொண்டார்.

42 minute ago
3 hours ago
16 May 2026
16 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
42 minute ago
3 hours ago
16 May 2026
16 May 2026