Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 08, வியாழக்கிழமை
Menaka Mookandi / 2017 ஏப்ரல் 29 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
1492: இந்தியாவுக்கு வழி கண்டுபிடிப்பதற்கான பயணத்தை ஆரம்பிப்பதற்கு கிறிஸ்டோபர் கொலம்பஸுக்கு ஸ்பெய்ன் அங்கீகாரம் வழங்கியது.
1900: ஹவாய் தீவு அமெரிக்காவின் ஒரு பிராந்தியமாகியது.
1938: இங்கிலாந்தின் எவ்.ஏ. கிண்ண கால்பந்தாட்ட இறுதிப்போட்டி முதல் தடவையாக தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக்கப்பட்டது.
1945: ஜேர்மனியின் சர்வாதிகாரி அடோல்வ் ஹிட்லரும் அவரின் மனைவி ஈவா புரோனும் பதுங்குக் குழியொன்றில தற்கொலை செய்துகொண்டனர். கோவியத் படைகள் பேர்லின் நகரில் வெற்றிக்கொடியேற்றின.
1993: அமெரிக்க டென்னிஸ் வீராங்கனை மோனிகா செலஸ், ஜேர்மனியின் ஹம்பர்க் நகரில் நடைபெற்ற போட்டியொன்றின்போது ரசிகர் ஒருவரால் கத்தியால் குத்தப்பட்டார்.
1993: ஜெனீவாவில் ஐரோப்பிய அணுக்கருவியல் ஆய்வு அமைப்பில் உலகளாவிய வலையமைப்பு பிறந்தது.
1999: ஆசியான் அமைப்பில் கம்போடியா இணைந்து கொண்டது.
2004: ஈராக்கின் அபு கிறைப் சிறைச்சாலையில் கைதிகள் சித்திரவதை செய்யப்படும் காட்சிகள் கொண்ட புகைப்படங்களை அமெரிக்க ஊடகங்கள் வெளியிட்டன.
2006: ஆப்கானிஸ்தானில் தலிபான்களால் கடத்தப்பட்ட சூரியநாராயணா என்ற இந்தியப் பொறியியலாளர் கழுத்து வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
2010: உலகின் மிகப்பெரிய உலக வர்த்தக சந்தை, சீனாவின் ஷாங்காய் நகரில் திறந்து வைக்கப்பட்டது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .