Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
Kogilavani / 2015 செப்டெம்பர் 04 , மு.ப. 11:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
476: கடைசி ரோமப் பேரரசன் ரொமூலஸ் ஆகுஸ்டஸ் முடிதுறந்தான்.
1666: இலண்டன் மாநகரில் மூன்று நாட்களாக இடம்பெற்ற பெரும் தீ விபத்தில் 13,000 இற்கும் அதிகமான வீடுகள் அழிந்தன.
1781: லொஸ் ஏஞ்சலஸ் நகரம் ஸ்பானிய ஆளுநரான ஃபிலிப்பே டி நெவெ என்பவரால் அமைக்கப்பட்டது.
1870: பிரான்ஸ் மன்னன் நெப்போலியன் பதவியில் ,ருந்து அகற்றப்பட்டான். அரசி யூஜின் தனது பிள்ளைகளுடன் இங்கிலாந்துக்குத் தப்பி ஓடினாள். மூன்றாவது குடியரசு அமைக்கப்பட்டது.
1884: குற்றவாளிகளை ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்சுக்கு அனுப்பும் கொள்கையை பிரித்தானியா கைவிட்டது.
1886: 30 ஆண்டுகள் போரின் பின்னர் அப்பாச்சி பழங்குடிகளின் தலைவன் ஜெரனிமோ தனது படைகளுடன் அரிசோனாவில் சரணடைந்தான்.
1888: தான் கண்டுபிடித்த படப்பிடிப்பு கருவிக்கு ஜார்ஜ் ஈஸ்ட்மன் கோடாக் என்பதை வர்த்தகக் குறியீடாக காப்புரிமை பெற்றுக் கொண்டார்.
1939: இரண்டாம் உலகப் போர்: நேபாளம் ஜெர்மனி மீது போரை அறிவித்தது.
1939: இரண்டாம் உலகப் போர்: ஐரோப்பியப் போரில் ஜப்பான் நடுநிலையை அறிவித்தது.
1951: கண்டங்களுக்கிடையேயான முதலாவது நேரடித் தொலைக்காட்சி ஜப்பானில் இடம்பெற்ற அமைதி மாநாட்டில் இருந்து கலிபோர்னியாவின் சான் பிரான்சிஸ்கோ நகருக்கு ஒளிபரப்பப்பட்டது.
1956: வன்தட்டு நினைவகத்தைக் கொண்ட உலகின் முதலாவது கணினியை ஐபிஎம் அறிமுகப்படுத்தியது.
1963: சுவிஸ் எயார் விமானம் சுவிட்சர்லாந்தில் வீழ்ந்து நொருங்கியதில் அதில் பயணஞ் செய்த அனைத்து 80 பேரும் கொல்லப்பட்டனர்.
1970: சல்வடோர் அலெண்டே சிலி நாட்டின் அதிபரானார்.
1971: அலாஸ்காவில் போயிங் விமானம் ஒன்று வீழ்ந்ததில் அதில் பயணம் செய்த 111 பேரும் கொல்லப்பட்டனர்.
1972: ஐக்கிய அமெரிக்காவின் மார்க் ஸ்பிட்ஸ் ஜெர்மனியின் மியூனிக் நகரில் ,டம்பெற்ற 1972 ஒலிம்பிக் போட்டிகளில் நீச்சலில் ஏழாவது தங்கப் பதக்கத்தைப் பெற்று சாதனை படைத்தார்.
1978: அண்ணா பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டது.
1996: கொலம்பிய புரட்சி இராணுவப் படையினர் கொலம்பியாவின் ,ரணுவ முகாமொன்றைத் தாக்கினர். மூன்று வாரங்கள் நீடித்த இக்கரந்தடிப் போரில் 130 பேர் கொல்லப்பட்டனர்.
2006: இஸ்ரேலின் டெல் அவீவ் நகரின் பாடசாலை ஒன்றின் அடியில் கி.மு 1ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகக் கருதப்படும் ஒரு புதைகுழிக் குகை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது.
2007: சூறாவளி ஃபீலிக்ஸ் நிக்கராகுவாவைத் தாக்கியதில் பலத்த நிலச்சரிவுகளும் உயிரிழப்புகளும் ஏற்பட்டன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
2 hours ago
3 hours ago
3 hours ago