Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Ilango Bharathy / 2021 செப்டெம்பர் 07 , மு.ப. 12:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
1929 : பின்லாந்தில் 'குரு' என்ற பயணிகள் கப்பல் மூழ்கியதில், 136 பேர் கொல்லப்பட்டனர்.
1940 : இரண்டாம் உலகப் போர் - பிரித்தானிய மக்களை அச்சுறுத்தும் வகையில் ஜேர்மனியினர் இலண்டன் நகரில், 300 டொன் கனவெடிகுண்டுகளையும், 13,000 எரிகுண்டுகளையும் வீசினர். 57 நாட்கள் தொடர்ந்து குண்டுவீச்சு இடம்பெற்றது.
1942 : உக்ரேனில் 8,700 யூதர்கள் நாசி ஜேர்மனியரினால் கொலைக்களத்திற்கு அனுப்பப்பட்டனர்.
1943 : டெக்சாசில் உணவுவிடுதி ஒன்றில் இடம்பெற்ற தீ விபத்தில் சிக்கிய 55 பேர் கொல்லப்பட்டனர்.
1950 : ஸ்கொட்லாந்தில் நிலக்கரிச் சுரங்கம் ஒன்று இடிந்து வீழ்ந்ததில், 13 பேர் கொல்லப்பட்டனர். 116 பேர் காப்பாற்றப்பட்டனர்.
1953 : நிக்கிட்டா குருசேவ், சோவியத் ஒன்றியத்தின் மத்திய குழு தலைவரானார்.
1965 : இந்திய எல்லைகளில் சீனா தனது படைகளைக் குவிக்கப்போவதாக அறிவித்தது.
1977 : பனாமா கால்வாய் தொடர்பாக பனாமாவுக்கும் ஐக்கிய அமெரிக்காவுக்கும் இடையில் உடன்பாடு எட்டப்பட்டது. 20ஆம் நூற்றாண்டின் இறுதியில் பனாமா கால்வாயின் கட்டுப்பாட்டை பனாமாவுக்குக் கையளிப்பதாக அமெரிக்கா உறுதி தந்தது.
1978 : கொழும்பு இரத்மலானை விமான நிலையத்தில் அவ்ரோ விமானம் ஒன்று குண்டு வைத்துத் தகர்க்கப்பட்டது.
1978 : பல்கேரிய அதிருப்தியாளர் கியோர்கி மார்க்கொவ் இலண்டன் வாட்டர்லூ பாலத்தைக் கடக்கையில், பல்கேரிய இரகசிய காவற்படையினன் ஒருவனால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
1986 : தென்னாபிரிக்காவின் ஆங்கிலிக்கன் திருச்சபையின் முதலாவது கறுப்பினத் தலைவராக டெஸ்மண்ட் டூட்டு நியமிக்கப்பட்டார்.
1986 : சிலியின் அதிபர் ஆகுஸ்டோ பினொச்செ கொலை முயற்சி ஒன்றிலிருந்து தப்பினார்.
1988 : ஆப்கானிஸ்தானின் முதலாவது விண்வெளி வீரர் அப்துல் அஹாட் மொஹ்மண்ட், சோவியத்தின் சோயூஸ் விண்கலத்தில் பூமி திரும்பினார்.
1998 : கூகுள் ஆரம்பிக்கப்பட்டது.
1999 : ஏதன்சில் இடம்பெற்ற 5.9 ரிக்டர் அளவு நிலநடுக்கத்தினால் 143 பேர் கொல்லப்பட்டனர்.
1999 : இலங்கை இராணுவத்தினரால் யாழ்ப்பாணம் செம்மணியில் கொல்லப்பட்ட 600 க்கும் மேற்பட்ட தமிழர்களின் புதை குழி விபரம் தெரியவந்தது.
2004 : சூறாவளி ஐவன் கிரனாடாவைத் தாக்கியதில், 39 பேர் கொல்லப்பட்டு 90 விழுக்காடு கட்டிடங்கள் சேதமாயின.
18 minute ago
20 minute ago
48 minute ago
18 Sep 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
20 minute ago
48 minute ago
18 Sep 2025