2021 நவம்பர் 30, செவ்வாய்க்கிழமை

வரலாற்றில் இன்று: ஒக்டோபர் 01

Ilango Bharathy   / 2021 ஒக்டோபர் 01 , மு.ப. 12:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

கி.மு. 331: மகா அலெக்ஸாண்டர் மன்னன், பேர்சியாவின் 3ஆம் டேரியஸை கௌகமேளா போர்க்களத்தில் தோற்கடித்தார்.

கி.மு. 959: முழு இங்கிலாந்துக்குமான மன்னனாக எட்கார் தெரிவு செய்யப்பட்டார்.

1273: ரோமன் கந்தோலிக்க மதத்தினைச் சேர்ந்த ஏர்ல் ரூடொல்ஃப் வொன் ஹப்ஸ்பேர்க் - ஜேர்மனியின் மன்னனாகினார்.

1653: உக்ரேனை ரஷ்யாவுடன் இணைப்பதற்கு ரஷ்ய நாடாளுமன்றம் அங்கீகாரம்.

1795: பெல்ஜியத்தை பிரான்ஸ் கைப்பற்றியது.

1843: லண்டனில் நியூஸ் ஒவ் த வேர்ல்ட் பத்திரிகை முதல் தடவையாக வெளியாகியது.

1830: நெதர்லாந்தின் ஆம்ஸ்ரெடம் நகரில் பொது வர்த்தக சஞ்சிகை வெளியீடு ஆரம்பிக்கப்பட்டது.

1864: கொல்கத்தாவில் பாரிய சூறாவளி தாக்கத்தினால் 70,000 பேர் உயிரிழப்பு.

1869: உலகின் முதலாவது தபாலட்டையை ஆஸ்திரியா வெளியிட்டது.

1888: தேசிய புவியியல் சஞ்சிகை முதன்முதலாக வெளியிடப்பட்டது.

1893: அமெரிக்காவின் மிசிசிப்பியில் ஏற்பட்ட பாரிய புயலினால் 1800 பேர் உயிரிழப்பு.1949: சீன மக்கள் குடியரசு மாவோ சேதுங்கினால் பிரகடணம்.

1958: அமெரிக்காவில் தேசிய விண்வெளி ஆலோசனைக் குழுவுக்குப் பதிலாக அமைக்கப்பட்ட தேசிய விண்வெளி ஆராய்ச்சி நிலையம் (நாசா) செயற்படத் தொடங்கியது.

1962: அமெரிக்காவின் மிசிசிப்பி பல்கலைக்கழகத்தில் முதல்தடவையாக கறுப்பின மாணவர் ஒருவர் சேர்க்கப்பட்டதையடுத்து இடம்பெற்ற நிறவெறி மோதல்களில் இருவர் கொல்லப்பட்டு, 75 இற்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.

1970: மாரடைப்பால் காலமான எகிப்திய ஜனாதிபதி கமால் நாஸரின் இறுதி ஊர்வலத்தில் லட்சக்கணக்கானோரில் சன நெரிசலில் சிக்கி 48 பேர் பலி.

1975: முஹமட் அலிக்கும் அவரின் பிரதான போட்டியாளருக்கும் இடையில் மணிலாவில் நடைபெற்ற புகழ்பெற்ற குத்துச்சண்டை போட்டியில் அலி வெற்றிபெற்றார். 14 சுற்றுகளுக்கு இப்போட்டி நீடித்தது.

1979: பனாமா கால்வாயின் இறைமை அமெரிக்காவிடமிருந்து பனாமாவுக்கு வழங்கப்பட்டது.

2005: இந்தோனேஷியாவின் சுற்றுலாத்தலமான பாலி தீவில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 26 பேர் பலி.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .