2021 நவம்பர் 30, செவ்வாய்க்கிழமை

வரலாற்றில் இன்று: ஒக்டோபர் 03

Ilango Bharathy   / 2021 ஒக்டோபர் 03 , மு.ப. 08:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

1739: மூன்றாண்டு கால ரஷ்ய – துருக்கி யுத்தத்தின் இறுதியில் ஒட்டோமான் பேரரசுக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான 'நீஸ்ஸா ஒப்பந்தம்' கையெழுத்திடப்பட்டது.


1929: சேர்பியா, குரோஷியா, ஸ்லோவேனியா ஆகியன இணைந்த இராஜ்ஜியத்திற்கு யூகோஸ்லாவிய இராஜ்ஜியம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

1932: பிரிட்டனிடமிருந்து ஈராக் சுதந்திரம் பெற்றது.

1935: ஜெனரல் டி போனோ தலைமையில், எத்தியோப்பியா மீது இத்தாலி படையெடுத்தது.

1942: ஜேர்மனியினால் வி-2 ரொக்கட்; விண்ணில் ஏவப்பட்டது. மனிதர்களால் உருவாக்கப்பட்டு விண்வெளியை அடைந்த முதல் பொருள் இது.
 

1944: ஜேர்மனியிடம் போலந்து சரணடைந்தது.
 

1952 பிரிட்டன் வெற்றிகரமாக அணுவாயுதத்தை பரீட்சித்தது.

1990: இரண்டாம் உலக யுத்தத்தின் பின்னர் கிழக்கு, மேற்காக பிரிக்கப்பட்ட இரு ஜேர்மனிகளும் மீண்டும் ஒன்றிணைந்தன.


1995: அமெரிக்க  றக்பி கால்பந்தாட்ட நட்சத்திரமான ஓ.ஜே. சிம்ஸன், தனது மனைவி நிகோலையும் அவரின் நண்பர் ரொனால்ட் கோல்ட்மனையும் கொலை செய்ததாக கூறப்பட்ட வழக்கில் சிம்ஸன் குற்றமற்றவர் என பரபரப்பான தீர்ப்பு வழங்கப்பட்டது.

 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .