2023 ஜூன் 09, வெள்ளிக்கிழமை

வரலாற்றில் இன்று: பெப்ரவரி 09

Ilango Bharathy   / 2023 பெப்ரவரி 09 , மு.ப. 12:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

1621 – 15-ம் கிரகோரி திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1640 – இலங்கையின் நீர்கொழும்பு நகரை ஒல்லாந்தர் கைப்பற்றினர்.

1775 – அமெரிக்கப் புரட்சிப் போர்: பிரித்தானிய நாடாளுமன்றம் மாசச்சூசெட்சு மாநிலத்தை கிளர்ச்சி இடமாக அறிவித்தது.

1822 – எயிட்டி புதிதாக அமைக்கப்பட்ட டொமினிக்கன் குடியரசை முற்றுகையிட்டது.

1825 – வாக்காளர் குழுக்களில் எந்த வேட்பாளரும் பெரும்பான்மை பெறத் தவறியதை அடுத்து, அமெரிக்கக் காங்கிரஸ், ஜான் குவின்சி ஆடம்சை ஐக்கிய அமெரிக்காவின் அரச தலைவராகத் தேர்ந்தெடுத்தது.

1861 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: ஜெபர்சன் டேவிஸ் அமெரிக்க மாநிலங்களின் கூட்டமைப்பின் இடைக்காலத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1895 – வில்லியம் மோர்கன் கைப்பந்தாட்டத்தைக் கண்டுபிடித்தார்.

1897 – பெனின் மீது பிரித்தானியர் தாக்குதலை ஆரம்பித்தனர்.

1900 – இலங்கையிலும், இந்தியாவிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது.

1900 – டேவிசுக் கோப்பை டென்னிசு போட்டி ஆரம்பிக்கப்பட்டது.

1904 – உருசிய-சப்பானியப் போர்: போர்ட் ஆர்த்தர் சமர் முடிவடைந்தது.

1913 – எரிவெள்ளிக் கூட்டம் ஒன்று வடக்கு மற்றும் தெற்கு அமெரிக்கப் பகுதிகளில் தென்பட்டது. இது பூமியின் சிறிய, குறுகிய வாழ்வுக் காலமுள்ள ஒரு இயற்கைத் துணைக்கோள் என வானியலாளர்களால் கூறப்பட்டது.

1920 – ஆர்க்ட்டிக் தீவுக்கூட்டமான சுவல்பார்டு மீது நோர்வேயின் உரிமை அங்கீகரிக்கப்பட்டது.

1951 – கொரியப் போர்: இரண்டு-நாள் கியோச்சாங் படுகொலைகள் ஆரம்பமாயின. தென்கொரிய இராணுவம் கியோச்சாங் என்ற இடத்தில் 719 பொதுமக்களைக் கொன்று குவித்தது.

1959 – முதலாவது கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை ஆர்-7 சோவியத் ஒன்றியத்தில் வெற்றிகரமாகச் சோதிக்கப்பட்டது.

1965 – வியட்நாம் போர்: ஐக்கிய அமெரிக்கத் தாக்குதல் படைப்பிரிவு முதற்தடவையாக தென் வியட்நாமிற்கு அனுப்பப்பட்டது.

1971 – அமெரிக்காவின் லாசு ஏஞ்சலசில் 6.5–6.7 அளவு நிலநடுக்கம் ஏற்பட்டதில் 64 பேர் உயிரிழந்தனர்.

1971 – அப்பல்லோ திட்டம்: சந்திரனில் தரையிறங்கிய மூன்றாவது விண்கலம் அப்பல்லோ 14 மூன்று அமெரிக்கர்களுடன் வெற்றிகரமாக பூமி திரும்பியது.

1975 – சோயூஸ் 17 விண்கலம் பூமி திரும்பியது.

1986 – ஏலியின் வால்வெள்ளி சூரியனுக்கு அண்மையில் எட்டரைக் கோடி கிலோ மீற்றர் தூரத்தில் வந்தது.

1991 – லித்துவேனியாவில் விடுதலைக்கு ஆதரவாக மக்கள் வாக்களித்தார்கள்.

1996 – ஐரியக் குடியரசு இராணுவம் தனது 18 மாத போர்நிறுத்த உடன்பாட்டை முறித்துக்கொண்ட சில மணிநேரத்தில் லண்டனில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் இருவர் கொல்லப்பட்டனர்.

1996 – கோப்பர்நீசியம் தனிமம் முதற்தடவையாகக் கண்டுபிடிக்கப்பட்டது.

2008 – இந்தோனேசியாவின் பண்டுங் நகரில் இசை நிகழ்ச்சி ஒன்றில் இடம்பெற்ற நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்தனர்.

2016 – ஜேர்மன், பவேரியா மாநிலத்தில் இரண்டு பயணிகள் தொடருந்துகள் மோதியதில் 12 பேர் உயிரிழந்தனர், 85 பேர் காயமடைந்தனர்.

2018 – தென் கொரியாவில் 2018 குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் ஆரம்பமாயின.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .