Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2023 ஜூன் 09, வெள்ளிக்கிழமை
Ilango Bharathy / 2023 பெப்ரவரி 22 , மு.ப. 12:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
1495 – பிரான்ஸ் மன்னர் எட்டாம் சார்லசு நாப்பொலியை அடைந்து அந்நகரைக் கைப்பற்றினார்.
1651 – ஜேர்மனியின் பிரீசியக் கரை வெள்ளப்பெருக்கினால் அழிந்தது. 15,000 பேர் வரை உயிரிழந்தனர்.
1658 – மன்னார் நகரம் டச்சுக்காரரினால் கைப்பற்றப்பட்டது.
1797 – பிரித்தானியா மீதான கடைசிப் படையெடுப்பு வேல்சின் பிசுகார்டு நகரில் பிரெஞ்சுப் படைகளால் மேற்கொள்ளப்பட்டது.
1819 – எசுப்பானியா புளோரிடாவை ஐக்கிய அமெரிக்காவுக்கு ஐந்து மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு விற்றது.
1847 – மெக்சிக்கோ-அமெரிக்கப் போர்: புவெனா-விஸ்டா நகரில் இடம்பெற்ற போரில் 15,000 மெக்சிக்கர்களை 5,000 அமெரிக்கப் படைகள் தோற்கடித்தன.
1848 – பாரிசில் லூயி பிலிப் மன்னனுக்கெதிரான பிரெஞ்சுப் புரட்சி வெடித்தது. இரண்டு நாட்களின் பின்னர் அவன் முடி துறந்தான்.
1853 – வாசிங்டன் பல்கலைக்கழகம் எலியட் செமினறி என்ற பெயரில் மிசூரி, செயின்ட் லூயிசில்| ஆரம்பிக்கப்பட்டது.
1862 – ஜெபர்சன் டேவிஸ் அமெரிக்க மாநிலங்களின் கூட்டமைப்பின் அரசுத்தலைவராக அதிகாரபூர்வமாக வர்ஜீனியா, ரிச்மண்ட் நகரில் பொறுப்பேற்றார்.
1882 – சேர்பிய பேரரசு மீள உருவாக்கப்பட்டது.
1889 – அமெரிக்க அரசுத்தலைவர் குரோவர் கிளீவ்லாண்ட் வடக்கு டகோட்டா, தெற்கு டகோட்டா, மொன்ட்டானா, வாசிங்டன் ஆகியவற்றை அமெரிக்காவின் மாநிலங்களாக அறிவிக்கும் சட்டமூலத்தில் கையெழுத்திட்டார்.
1899 – பிலிப்பைன்-அமெரிக்கப் போர்: பிலிப்பீனியப் படைகள் அமெரிக்கப் படைகளுக்கு எதிராக முதன் முதலாகத் தாக்குதலைத் தொடுத்தன. ஆனாலும், மணிலா நகரை அமெரிக்கர்களிடம் இருந்து கைப்பற்றத் தவறியது.
1907 – பேடன் பவல் முதலாவது சாரணிய முகாமை இங்கிலாந்தில் பிரவுன்சி என்ற இடத்தில் அமைத்தார்.
1909 – கனெடிக்கட் கப்பலின் தலைமையிலான 16 அமெரிக்கப் போர்க்கப்பல்கள் தமது உலகப் பயணத்தை முடித்துக்கொண்டு அமெரிக்கா திரும்பின.
1921 – உருசியப் படையினர் மங்கோலியாவில் இருந்து சீனர்களை வெளியேற்றி, போகடு கானை மங்கோலியாவின் பேரரசனாக அறிவித்தனர்.
1924 – கால்வின் கூலிஜ் வெள்ளை மாளிகையில் இருந்து வானொலி மூலம் உரையாற்றிய முதலாவது அமெரிக்கத் தலைவர் ஆனார்.
1942 – இரண்டாம் உலகப் போர்: பிலிப்பீன்சில் ஐக்கிய அமெரிக்காவின் தோல்வியைத் தொடர்ந்து அமெரிக்கத் தளபதி டக்ளஸ் மக்கார்த்தரை வெளியேறுமாறு அமெரிக்க அதிபர் பிராங்கிளின் ரூஸ்வெல்ட் பணித்தார்.
1943 – இரண்டாம் உலகப் போர்: நாட்சி செருமனியில் சோபி சோல் உட்பட வெள்ளை ரோசா இயக்க உறுப்பினர்கள் மூவர் தூக்கிலிடப்பட்டனர்.
1944 – இரண்டாம் உலகப் போர்: அமெரிக்க வான்படையினர் தவறுதலாக நான்கு இடச்சு நகரங்கள் மீது தாக்குதல் நடத்தியதில் 800 இற்கும் அதிகமானோர் இறந்தனர்.
1958 – எகிப்தும் சிரியாவும் இணைந்து ஐக்கிய அரபுக் குடியரசை அமைத்தன.
1961 – உருசிய மக்கள் நட்புறவுப் பல்கலைக்கழகத்திற்கு கொங்கோவில் கொல்லப்பட்ட கறுப்பினத் தலைவர் பத்திரிசு லுமும்பாவின் நினைவாக அவரது பெயர் சூட்டப்பட்டது.
1969 – பீட்டில்சின் அனைத்து அங்கத்தவர்களும் கடைசித் தடவையாக சேர்ந்து பாடல் பதிவில் ஈடுபட்டனர்.
1972 – அதிகாரபூர்வ ஐரியக் குடியரசு இராணுவம் இங்கிலாந்து, ஆம்ப்சயரில் உள்ள ஆல்டர்சொட் இராணுவப் பாசறையில் வாகனக் குண்டுவெடிப்பை நடத்தியது. ஏழு பேர் கொல்லப்பட்டு, 19 பேர் காயமடைந்தனர்.
1974 – பாக்கித்தான், லாகூரில், நடைபெற்ற இஸ்லாமியக் கூட்டமைப்பின் உச்சிமாநாட்டில் 37 நாடுகளும், 22 அரசுத்தலைவர்களும் பங்குபற்றினர். இம்மாநாட்டில் வங்காளதேசம் அங்கீகரிக்கப்பட்டது.
1979 – சென் லூசியா ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து விடுதலை பெற்றது.
1986 – பிலிப்பீன்சில் மக்கள் புரட்சி வெடித்தது.
1997 – டோலி என்ற ஆடு வெற்றிகரமாக படியெடுக்கப்பட்டதாக பிரித்தானிய அறிவியலாளர்கள் அறிவித்தனர்.
2002 – அங்கோலாவின் அரசியல் தலைவர் ஜொனாசு சவிம்பி இராணுவத்தினரால் கொல்லப்பட்டார்.
2002 – இலங்கை அரசாங்கத்திற்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் வவுனியாவில் கையெழுத்திடப்பட்டது.
2005 – ஈரானில் கெர்மான் மாகாணத்தில் 6.4 அளவு நிலநடுக்கம் ஏற்பட்டதில் 612 பேர் உயிரிழந்தனர்.
2006 – பிரித்தானியாவின் சரித்திரத்தில் மிகப் பெரும் கொள்ளை கெண்ட் நகரில் இடம்பெற்றது. £53 மில்லியன் பணத்தை அறுவர் சேர்ந்து கொள்ளையிட்டனர்.
2011 – நியூசிலாந்தில் கிறைஸ்ட்சேர்ச்சில் பெரும் நிலநடுக்கம் ஏற்பட்டதில் 185 பேர் உயிரிழந்தனர்.
2012 – அர்கெந்தீனா, புவெனஸ் ஐரிஸ் நகரில் தொடருந்து ஒன்று விபத்துக்குள்ளாகியதில் 51 பேர் உயிரிழந்தனர், 700 பேர் காயமடைந்தனர்.
2014 – உக்ரைன் அரசுத்தலைவர் விக்டர் யானுக்கோவிச்சுக்கெதிராக நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானம் 328–0 வாக்குகளால் வெற்றியடைந்தது.
2015 – பத்மா நதியில் பயணிகள் படகு ஒன்று மூழ்கியதில் 70 பேர் உயிரிழந்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
21 minute ago
29 minute ago
36 minute ago