2021 ஓகஸ்ட் 02, திங்கட்கிழமை

வரலாற்றில் இன்று: ஜூன் 03

Ilango Bharathy   / 2021 ஜூன் 03 , மு.ப. 12:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

1839: சீன அதிகாரி லீன் சே ஹூவினால் பிரித்தானியர்களின் 12 இலட்சம் கிலோகிராம் ஓபியம் போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இச்சம்பவம் இரு நாடுகளுக்கிடையிலான முதலாவது ஓபியம் யுத்தத்திற்கு வழிவகுத்தது.

1937: பிரிட்டனின் மன்னர் 8 ஆம் எட்வர்ட், ஏற்கெனவே இரு தடவை திருமணமான வல்லிஸ் சிம்ஸன் எனும் அமெரிக்க பெண்ணை திருமணம் செய்தார். இத்திருமணம் காரணமாக அவர் அரசுரிமையை இழக்க நேரிட்டது.

1962: பிரெஞ்சு விமானமொன்று பாரிஸ் விமான நிலையத்தில் விபத்துக்குள்ளானதால் 130 பேர் பலி.

1963:  அமெரிக்க விமானமொன்று பசுபிக் சமுத்திரத்தில் விழுந்ததால் 101 பேர் பலி.

1969:  தென் வியட்நாம் கரையோரத்தில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த அவுஸ்திரேலிய விமானந்தாங்கி கப்பலொன்று மோதியதால் அமெரிக்க யுத்த கப்பல் இரண்டாக உடைந்தது.

1982: லண்டனில், இஸ்ரேல் தூதுவர் ஷ்லோமோ ஆர்கோ துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தார்.

1984: சீக்கியர்களின் புனிதத் தலமான பொற்கோவில் மறைந்திருந்த சீக்கிய தீவிரவாதிகளுக்கு எதிராக இந்திய இராணுவம் 'ஒபரேஷன் புளூ ஸ்டார்' எனப் பெயரிடப்பட்டபட்ட தாக்குதலை ஆரம்பித்தது.

1998: ஜேர்மனியில் இடம்பெற்ற ரயில் விபத்தினால் 101 பேர் பலி.

2006: சேர்பியா- மொன்டேனேக்ரோ கூட்டரசிலிருந்து பிரிந்து மொன்டேனேக்ரோ சுதந்திரப் பிரகடனம் செய்தது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .