2021 ஓகஸ்ட் 03, செவ்வாய்க்கிழமை

வரலாற்றில் இன்று: மே 20

Editorial   / 2021 மே 20 , மு.ப. 04:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

1526: சிரியாவில் ஏற்பட்ட பூகம்பத்தினால் சுமார்  3 லட்சம் பேர் பலியாகினர்.


1835: நவீன கிறீஸின் முதலாவது மன்னராக ஒட்டோ தெரிவு செய்யப்பட்டார்.

1902: அமெரிக்காவிடமிருந்து கியூபா சுதந்திரம் பெற்றது.1932: அமேலியா எர்ஹார்ட் எனும் பெண், அத்திலாந்திக் சமுத்திரத்தை தனியாக விமானத்தில் கடக்கும் பயணத்தை கனடாவிலிருந்து  ஆரம்பித்தார். மறுநாள் அவர் அயர்லாந்தை வந்தடைந்தார்.

1940: போலந்தின் அஸ்விட்ஸ் நகரில் ஜேர்மனியின் நாஜி ஆட்சியாளர்களால் நிர்மாணிக்கப்பட்ட  வதை முகாம்களுக்கு கைதிகள் கொண்டுவரப்படத் தொடங்கினர்.

1965: பாகிஸ்தானின் விமானமொன்று எகிப்தின் கெய்ரோ நகரில்  விபத்துக்குள்ளானதால் 119 பேர் பலி.

1980: கனடாவிலிருந்து கியூபெக் மாநிலம் தனிநாடாக பிரிவது தொடர்பான சர்வஜன வாக்கெடுப்பில் பிரிவிணைக்கு எதிராக 60 சதவீத கியூபெக் மக்கள் வாக்களித்தனர்.

1983: எயிட்ஸ் நோயை உண்டாக்கும் கிருமிகளைக் கண்டுபிடித்த செய்திகள் முதற் தடவையாக வெளியிடப்பட்டன.

1995: கியூபெக் மாநிலத்தில் இடம்பெற்ற இரண்டாவது வாக்கெடுப்பில் கனடாவில் இருந்து விடுதலை பெறுவதற்கு எதிராக பெரும்பான்மையானோர் வாக்களித்தனர்.

1999: புளூடூத் (Bluetooth) வெளியிடப்பட்டது.

2000: பிரித்தானிய பிரதமர் டொனி பிளேயர்- செரி பிளேயர் தம்பதிக்கு ஆண் குழந்தையொன்று பிறந்தது. 150 வருடகாலத்தில் பதவியிலிருக்கும் போது தந்தையாகிய முதலாவது பிரித்தானிய பிரதமரானார் டொனி பிளேயர்.

2002: கிழக்குத் திமோர் தனிநாடாகியதை போர்த்துக்கல்  அங்கீகரித்ததன் மூலம் கிழக்குத்  திமோரில் 23 வருடகால இந்தோனேஷிய ஆட்சி முடிவுக்கு வந்தது.

2012: வட இத்தாலியில் இடம்பெற்ற 6.0 ரிச்டர் அளவிலாள நிலஅதிர்வினால் 27பேர் கொல்லப்பட்டதுடன் 50க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

2014: நைஜீரியாவின் ஜோஸ் நகரில் இடம்பெற்ற இரு குண்டுத் தாக்குதல் சம்பவங்களில் 118பேர் கொல்லப்பட்டனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .