2025 மே 20, செவ்வாய்க்கிழமை

வரலாற்றில் இன்று: செப்டெம்பர் 11

Menaka Mookandi   / 2014 செப்டெம்பர் 10 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

1609: அமெரிக்காவில் பழங்குடியினர் வசித்துக்கொண்டிருந்த மன்ஹன்ட்ன்தீவு ஹென்ரி ஹட்சன் எனும் ஐரோப்பியரினால் கண்டுபிடிக்கப்பட்டது.


1919: ஹொன்டுராஸ் மீது அமெரிக்கா படையெடுத்தது.

1965: பாகிஸ்தானுடனான போரில், லாகூருக்கு அருகிலுள்ள புர்கி நகரை இந்தியப் படைகள் கைப்பற்றின.

1973: சிலியில் ஜனாதிபதி சல்வடோர் அலென்டே, ஜெனரல் பினோசெட் தலைமையிலான இராணுவப் புரட்சி மூலம் பதவி கவிழ்கப்பட்டார்.

1982: லெபனானில் பலஸ்தீன அகதிகளின் பாதுகாப்புக்காக தங்கியிருந்த சர்வதேச துருப்புகள் தலைநகர் பெய்ருத்திலிருந்து வெளியேறின.

1998: கோலாலம்பூரில் பொதுநலவாய விளையாட்டு விழா ஆரம்பமாகியது.

2001: அமெரிக்காவில் செப்டெம்பர் 11 தாக்குதல் இடம்பெற்றது. 4 பயணிகள் விமானங்கள் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்டு இரு விமானங்கள் நியூயோர்க் இரட்டைக் கோபுரங்கள் மீது மோதப்பட்டன. ஒரு விமானம் வாஷிங்டனினல் பெண்டகன் மீது மோதியது. மற்றொரு விமானம் பென்சில்வேனியா மாநிலத்தில் வீழ்ந்து சிதறியது. இத்தாக்குதல்களில் சுமார் 3000 பேர் பலியாகினர்.

2004: கிறீஸில் இடம்பெற்ற ஹெலிகொப்டர் விபத்தில் 16 பேர் பலியாகினர்.

2007: குண்டுகள் அனைத்துக்கும் தந்தை குண்டு என வர்ணிக்கப்படும் உலகின் மிகப்பெரிய (அணுசக்தியற்ற) குண்டை ரஷ்யா பரீட்சித்தது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X