2025 மே 21, புதன்கிழமை

வரலாற்றில் இன்று: ஏப்ரல் 13

Menaka Mookandi   / 2013 ஏப்ரல் 12 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

1796: இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு யானையொன்று கொண்டுவரப்பட்டது. அமெரிக்காவில் காணப்பட்ட முதலாவது யானை இது.

1849: ஹங்கேரி குடியரசாகியது.

1919: ஜாலியன் வாலாபாக் படுகொலை: இந்தியாவின் அமிர்தசரஸ் நகரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது பிரித்தானிய படையினர் கண்மூடித்தனமாக துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதால் 379 பேர் பலி.

1945: ஜேர்மன் படையினரால் ஆயிரத்துக்கும் அதிகமான அரசியல் இராணுவ கைதிகள் கொல்லப்பட்டனர்.

1970: சந்திரனில் தரையிறங்குவதற்காக 3 விண்வெளி வீரர்களுடன் சென்ற அப்பலோ விண்கலத்தில் ஒட்சிசன் தாங்கி வெடித்தது. இதனால் இப்பயணம் கைவிடப்பட்டு விண்கலம் பூமிக்கு திருப்பப்பட்டது.

1987: போர்த்துக்கலின் கட்டுப்பாட்டிலிருந்த மெக்காவ் தீவை 1999 ஆம் ஆண்டு சீனாவிடம் திருப்பிக் கொடுப்பதற்கான ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.

1997: அமெரிக்க மாஸ்டர்ஸ் கோல்வ் சுற்றுப்போட்டியில் 21 வயதான டைகர் வூட்ஸ் சம்பியனானார். மிக இளம் வயதில் இப்பட்டத்தை வென்ற வீரர் இவர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .