Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
Menaka Mookandi / 2015 ஏப்ரல் 15 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
1818: அமெரிக்க – கனேடிய எல்லை தொடர்பான ரஸ் - பகொட் உடன்படிக்கையை அமெரிக்கா அங்கீகரித்தது.
1853: இந்தியாவின் முதலாவது பயணிகள் ரயில்சேவை பம்பாய், தானே நகரங்களுக்கிடையில் ஆரம்பமானது.
1917: நாட்டைவிட்டு வெளியேறியிருந்த விளாடிமிர் லெனின் சுவிட்ஸர்லாந்திலிருந்து ரஷ்யாவுக்குத் திரும்பினார்.
1919: பிரித்தானிய படையினரால் ஆர்ப்பாட்டக்காரர்கள் கொல்லப்பட்டதற்கு எதிராக மஹாத்மா காந்தி உண்ணாவிரதத்தை ஆரம்பித்தார்.
1944: பெல்கிரேட் நகரில் நேசநாடுகளின் படைகள் குண்டுவீச ஆரம்பித்தன. இத்தாக்குதலில் சுமார் 1100 பேர் பலியாகினர்.
1945: ஜேர்மனியின் பேர்லின் நகர் மீதான இறுதித் தாக்குதலை சோவியத் படைகள் ஆரம்பித்தன.
1945: ஜேர்மனிய கப்பலான எம்.வி. கோயா மீது சோவியத் நீர்மூழ்கியொன்று நடத்திய தாக்குதலால் சுமார் 7000 பேர் பலியாகினர்.
1947: டெக்ஸாஸ் நகர துறைமுகத்தில் கப்பலொன்று தீப்பற்றியதால் சுமார் 600 பேர் பலி.
1966: முதலாவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு கோலாலம்பூரில் ஆரம்பமானது.
1972: அப்பலோ 16 விண்கலம் சந்திரனை நோக்கி ஏவப்பட்டது.
1992: மொஸாம்பிக்கில் பி.கத்ரினா எனும் எண்ணெய் தாங்கி கப்பல் மூழ்கியதால் சுமார் 60,000 தொன் மசகு எண்ணெய் கடலில் கலந்தது.
2001: இந்தியா - பங்களாதேஷ் நாடுகளுக்கிடையில் 5 நாள் எல்லை மோதல் ஆரம்பமானது.
2007: ஐக்கிய அமெரிக்காவின் வேர்ஜீனியா பல்கலைக்கழகத்தில் கொரிய மாணவன் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் தமிழக பேராசிரியர் லோகநாதன் உட்பட 33 பேர் கொல்லப்பட்டதுடன் 29பேர் காயமடைந்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .