Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 07, புதன்கிழமை
Menaka Mookandi / 2017 மே 03 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
1493: ஐரோப்பாவுக்கு வெளியே கண்டுபிடிக்கப்பட்ட 'புதிய உலகத்தின்' பகுதிகளை எல்லைக் கோடொன்றின் அடிப்படையில் ஸ்பெய்னுக்கும் போர்த்துக்கலுக்கும் பாப்பரசர் 6 ஆம் அலெக்ஸாண்டர் பிரித்துக்கொடுத்தார்.
1904: அமெரிக்காவினால் பனாமா கால்வாய் நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.
1910: கனேடிய கடற்படை ஸ்தாபிக்கப்பட்டது.
1912: கிறீஸ் நாட்டின் ரொட்ஸ் தீவை இத்தாலி ஆக்கிரமித்தது.
1945: வடக்கு ஜேர்மனிய இராணுவம் அமெரிக்கத் தளபதி பீல்ட் மார்ஷல் பேர்னார்ட் மொன்ட்கோமரியிடம் சரணடைந்தது.
1949: இத்தாலியின் டொரினோ கால்பந்தாட்டக் கழகத்தின் வீரர்கள் அனைவரும் (காயத்தினால் சுற்றுலாவில் பங்குபற்றாத ஒருவரைத் தவிர) விமான விபத்தொன்றில் பலியாகினர்.
1953: ஏர்னஸ்ட் ஹெம்மிங்வேவுக்கு த ஓல்ட் மேன் அன்ட் த ஸீ நாவலுக்காக புளிட்ஸர் விருது வழங்கப்பட்டது.
1979: மார்கரட் தட்சர், பிரிட்டனின் முதலாவது பெண் பிரதமராக தெரிவானார்.
1990:சோவியத் யூனியனிடமிருந்து பிரிவதாக லத்வியா சுதந்திரப் பிரகடனம் செய்தது.
1994: இஸ்ரேல் பிரதமர் யிட்ஸாக் ராபினும் பலஸ்தீன விடுதலை இயக்கத்தின் தலைவர் யஸீர் அரபாத்தும் காஸா மற்றும் ஜெரிக்கோ பிரதேசத்திற்கு சுயாட்சி வழங்குவதற்கான ஒப்பந்தமொன்றில் கையெழுத்திட்டனர்.
2000: லண்டனின் முதலாவது நகரத் தந்தையாக கென் லிவிங்ஸ்டன் தெரிவு செய்யப்பட்டார்.
2002: நைஜீரியாவில் உள்ளூர் விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகியதில் 148பேர் கொல்லப்பட்டனர்.
2014: கென்யாவின் நைபூரி நகரில் பஸ் ஒன்றில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதலில் மூவர் கொல்லப்பட்டதுடன் 62பேர் படுகாயமடைந்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
6 hours ago