Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 08, வியாழக்கிழமை
Menaka Mookandi / 2017 மார்ச் 08 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
1796: நெப்போலியன் தனது முதல் மனைவி ஜோஸப்பினை திருமணம் செய்தார்.
1862: மெக்ஸிகோ - அமெரிக்க யுத்தத்தின்போது அமெரிக்க வரலாற்றில் முதல் தடவையாக பாரிய தரை – கடல் ஈரூடக தாக்குதல் ஆரம்பிக்கப்பட்டது.
1944: எத்தியோப்பியாவுடனான அடோவா சமரில் இத்தாலி தோல்வியுற்றதையடுத்து இத்தாலிய பிரதமர் பிரான்செஸ்கோ கிறிஸ்பி ராஜினாமா செய்தார்.
1944: சோவியத் விமானப்படையினர் எஸ்டோனியாவில் டல்லின் நகரில் பாரிய குண்டுவீச்சுகளை நடத்தியதால் பொதுமக்கள் உட்பட சுமார் 800 பேர் பலி.
1957: அமெரிக்காவின் அலாஸ்காவில் 8.3 ரிச்டர் அளவிலான பூகம்பம் ஏற்பட்டதால் உருவான சுனாமியினால் ஹவாய் உட்பட பல இடங்களில் பாரிய சேதம் ஏற்பட்டது.
1959: நியூயோர்க்கில் நடைபெற்ற அமெரிக்க சர்வதேச விளையாட்டுப்பொருள் கண்காட்சியில் பார்பி பொம்மை அறிமுகப்படுத்தப்பட்டது.
1967: அமெரிக்காவில் இரு விமானங்கள் மோதிக்கொண்டதால் 26 பேர் பலி.
1976: இத்தாலியில் இடம்பெற்ற கேபிள் கார் விபத்தில் 42 பேர் பலி.
1986: சலேஞ்சர் விண்ணோடத்தின் அழிந்த சிதைவுகளை ஐக்கிய அமெரிக்காவின் ஆழ்கடலோடிகள் கண்டுபிடித்தனர். இறந்த ஏழு விண்வெளி வீரர்களினதும் உடல்கள் உள்ளே இருந்தன.
2006: சனிக் கிரகத்தின் துணைக்கோளான என்செலாடசில் திரவ நிலையில் நீர் கண்டுபிடிக்கப்பட்டது.
2010: அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டன் டி.சி.யில் முதலாவது ஒரு பாலினத் திருமணம் நடைபெற்றது.
2011: டிஸ்கவரி விண்வெளி ஓடம் தனது கடைசி பயணத்தின்பின் பூமியில் தரையிறங்கியது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
3 hours ago