Ilango Bharathy / 2022 ஒக்டோபர் 16 , மு.ப. 12:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
1799 - பாஞ்சாலங்குறிச்சி மன்னன் கட்டபொம்மன் ஆங்கிலேயரால் தூக்கிலிடப்பட்டான்.
1813 - ஆறாவது கூட்டணி நாடுகள் நெப்போலியன் பொனபார்ட் மீது லீப்சிக் நகரில் தாக்குதலை ஆரம்பித்தன.
1834 - லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் அரண்மனையின் தொன்மைப் பொருட்கள் பல எரிந்து சேதமடைந்தன.
1905 - ரஷ்ய இராணுவம் எஸ்தோனியாவில் மக்கள் கூட்டமொன்றின் மீது சுட்டதில் 94 பேர் கொல்லப்பட்டனர்.
1939 - இரண்டாம் உலகப் போர்: பிரித்தானியா மீதான ஜெர்மனிய வான்படையின் முதலாவது தாக்குதல் இடம்பெற்றது.
1942 - பம்பாயில் இடம்பெற்ற வெள்ளப் பெருக்கில் 40,000 பேர் கொல்லப்பட்டனர்.
1964 - மக்கள் சீனக் குடியரசு தனது முதலாவது அணுவாயுதச் சோதனையை மேற்கொண்டது
1975 - கிழக்குத் திமோரில் ஆஸ்திரேலிய தொலைக்காட்சி ஊடகவியலாளர்கள் ஐந்து பேர் இந்தோனீசியப் படைகளினால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
1996 - குவாத்தமாலாவில் உதைப்பந்தாட்டப் போட்டி நிகழ்வில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 84 பேர் கொல்லப்பட்டனர்.
1998 - சிலியின் முன்னாள் சர்வாதிகாரி ஆகுஸ்டோ பினொச்சே லண்டனில் கைது செய்யப்பட்டார்.
2003 - தமிழ் விக்கிப்பீடியாவில் முதலாவது கட்டுரை சிரின் எபாடி பற்றி எழுதப்பட்டது.
2006 - ஈழப்போர்: இலங்கை, ஹபரணையில் நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டுத்தாக்குதலில் 102 கடற்படையினர் கொல்லப்பட்டனர்.
2006 - இலங்கையில் 1987 இல் இலங்கை- இந்திய ஒப்பந்தத்தை அடுத்து இணைக்கப்பட்டிருந்த வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் இணைப்பு செல்லுபடியற்றது என்று இலங்கை உயர்நீதிமன்றம் அறிவித்தது.
20 minute ago
38 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
38 minute ago