Editorial / 2018 ஓகஸ்ட் 20 , மு.ப. 12:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
1914 :முதலாம் உலகப் போர் - பெல்ஜியத்தின் தலைநகர் பிரசெல்சை ஜேர்மனியப் படைகள் கைப்பற்றின.
1917 : இலங்கையில் ஒரு ரூபாய்த் தாள் வழங்கப்பட்டது.
1940 : மெக்சிக்கோவில் இடம்பெற்ற கொலை முயற்சி ஒன்றில், ரஷ்யப் புரட்சியாளர் லியோன் ட்ரொட்ஸ்கி படுகாயமுற்று அடுத்த நாள் மரணமானார்.
1944 : இரண்டாம் உலகப் போர் - ருமேனியா மீது சோவியத் ஒன்றியம் தாக்குதலை ஆரம்பித்தது.
1948 : இலங்கை குடியுரிமை சட்டம் இலங்கை நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்டது. இதன் மூலம் 700,000 க்கும் அதிகமான (மொத்த மக்கள்தொகையில்) இலங்கைத் தோட்டத் தொழிலாளர்களான இந்திய வம்சாவளித் தமிழர்கள் நாடற்றவர்கள் ஆக்கப்பட்டனர்.
1953 : ஐதரசன் குண்டைத் தாம் சோதித்ததாக சோவியத் ஒன்றியம் அறிவித்தது.
1960 : செனெகல் மாலிக் கூட்டமைப்பில் இருந்து விலகி தனி நாடாக அறிவித்தது.
1968 : பனிப்போர் - 200,000 வார்சா ஒப்பந்த நாடுகளின் படைகள் செக்கோஸ்லவாக்கியாவினுள் புகுந்தன.
1975 : நாசா வைக்கிங் - 1 விண்கலத்தை செவ்வாயை நோக்கி ஏவியது.
1977 : நாசா வொயேஜர் - 2 விண்கலத்தை ஏவியது.
1988 : ஈரான் – ஈராக் போர் - 8 ஆண்டுகள் போரின் பின்னர் போர் நிறுத்தம் உடன்பாடாகியது.
1991 : எஸ்தோனியா சோவியத் ஒன்றியத்தில் இருந்து விலகி மீண்டும் தனி நாடாகியது.
1997 : அல்ஜீரியாவில் பொதுமக்கள் 60 பேர் படுகொலை செய்யப்பட்டனர்.
2006 – அருட்தந்தை ஜிம் பிறவுண் காணாமல் போனமைஇ 2006: கத்தோலிக்க அடிகள் ஜிம் பிரவுண் மற்றும் அவரது உதவியாளர் விமலதாஸ் ஆகியோர் அல்லைப்பிட்டியில் காணமால் போனார்கள்.
2006 – நமது ஈழநாடு பணிப்பாளர்இ முன்னாள் யாழ்ப்பாணம் பாராளுமன்ற உறுப்பினர் சி. சிவமகராஜா சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.
16 minute ago
1 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
1 hours ago
5 hours ago