Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 06, செவ்வாய்க்கிழமை
Editorial / 2018 ஓகஸ்ட் 07 , மு.ப. 12:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
1906 : கல்கத்தாவில் வங்காளப் பிரிவினை எதிர்ப்புப் போராட்டத்தின் போது, முதல் இந்திய தேசியக் கொடி உருவாக்கப்பட்டு பார்சி பகான் சதுக்கத்தில் ஏற்றப்பட்டது.
1927 : ஒன்டாரியோவுக்கும் நியூயோர்க்கிற்கும் இடையில் அமைதிப் பாலம் அமைக்கப்பட்டது.
1933 : ஈராக்கில் சிமேல் கிராமத்தில் 3,000 அசிரியர்கள் ஈராக்கிய அரசால் படுகொலை செய்யப்பட்டனர்.
1942 : இரண்டாம் உலகப் போர் - அமெரிக்கக் கடற்படையினர் சொலமன் தீவுகளின் குவாடல்கனால் தீவில் தரையிறங்கினர்.
1944 : ஆர்வர்டு மார்க் ஐ என்ற முதலாவது நிரல் மூலம் கட்டுப்படுத்தப்பட்ட கணிப்பானை ஐபிஎம் நிறுவனம் வெளியிட்டது.
1945 : இரண்டாம் உலகப் போர் - ஹிரோசிமா மீது அணுகுண்டு வீசப்பட்டதை அமெரிக்க அதிபர் ஹரி ட்ரூமன் அறிவித்தார்.
1955 : சோனி தனது முதலாவது டிரான்சிஸ்டர் வானொலிகளை ஜப்பானில் விற்பனைக்கு விட்டது.
1960 : ஐவரி கோஸ்ட் பிரான்சிடம் இருந்து விடுதலை பெற்றது.
1962 : தாலிடோமைடு என்ற மருந்தைப் பரிந்துரைக்க மறுத்த கனடிய - அமெரிக்க மருந்தியலாளர், பிரான்செஸ் கெல்சிக்கு அமெரிக்க அரசுத்தலைவரின் சிறப்பு விருது வழங்கப்பட்டது.
1970 : இஸ்ரேலுக்கும் எகிப்துக்கும் இடையே 1967 இல் ஆரம்பமான தேய்வழிவுப் போர் முடிவுற்றது.
1976 : வைக்கிங் 2 விண்கலம் செவ்வாயின் சுற்று வட்டத்துள் சென்றது.
1987 : லினி காக்சு பெரிங் நீரிணையைக் கடந்து, அமெரிக்காவில் இருந்து சோவியத் ஒன்றியம் வரை நீந்திய முதல் மனிதர் என்ற சாதனையை ஏற்படுத்தினார்.
1989 : எத்தியோப்பியாவில் இடம்பெற்ற விமான விபத்தில் அமெரிக்க சட்டமன்ற உறுப்பினர் மிக்கிலே லண்டு உட்பட 16 பேர் உயிரிழந்தனர்.
1990 : வளைகுடாப் போரின் ஒரு பகுதியாக முதலாவது தொகுதி அமெரிக்கப் படையினர் சவூதி அரேபியா வந்து சேர்ந்தனர்.
1998 : தான்சானியாவிலும் கென்யாவிலும் அமெரிக்கத் தூதரகங்களில் இடம்பெற்ற குண்டுவெடிப்புகளில், 212 பேர் கொல்லப்பட்டு 4,500 க்கு மேற்பட்டோர் காயமடைந்தனர்.
1999 : செச்சினிய - ஆதரவு இஸ்லாமிய தீவிரவாதிகள் தாகெஸ்தானுள் ஊடுருவினர்.
2006 : இலங்கை சோசலிச சமத்துவக் கட்சியின் உறுப்பினர் சிவப்பிரகாசம் மரியதாஸ் என்பவர் திருகோணமலையில் படுகொலை செய்யப்பட்டார்.
2008 : தெற்கு ஒசேத்தியா தொடர்பான ரஷ்சிய - ஜோர்ஜியப் போர் ஆரம்பமானது.
2017 : இந்தியாவில் உத்தரப்பிரதேசத்தில், பாபா ராகவ் தாஸ் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அடுத்த 5 நாட்களில் சுமார் 60 குழந்தைகள் ஒக்சிஜன் தரப்படாமல் இறந்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
2 hours ago
2 hours ago
3 hours ago