Janu / 2024 டிசெம்பர் 17 , பி.ப. 04:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
1586 – கோ-யோசெய் ஜப்பானின் பேரரசராக முடிசூடினார்.
1718 – பெரிய பிரித்தானியா எசுப்பானியா மீது போரை அறிவித்தது.
1777 –பிரான்ஸ் ஐக்கிய அமெரிக்காவை அங்கீகரித்தது.
1819 – சிமோன் பொலிவார் பெரிய கொலம்பியாவின் விடுதலையை அறிவித்தார்.
1835 – நியூயார்க் நகரில் இடம்பெற்ற பெரும் தீயில் 50 ஏக்கர் நிலப்பரப்பு சேதமடைந்தது.
1903 – ரைட் சகோதரர்கள் வடக்கு கரொலைனாவில் முதன்முதலில் பன்னிரெண்டு வினாடிகள் எஞ்சின் உந்தும் ரைட் பிளையர் ஊர்தியில் பறந்தனர்.
1907 – யூஜியன் வாங்சுக் பூட்டானின் முதலாவது மன்னராக முடிசூடினார்.
1918 – ஆத்திரேலியாவின் டார்வின் நகரில் ஆயிரத்திற்கும் அதிகமான தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டப் பேரணியில் கலந்துகொண்டனர்.
1926 – லித்துவேனியாவில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியை அடுத்து மக்களாட்சி அரசு கலைக்கப்பட்டு அண்டானசு சிமெத்தோனா ஆட்சியைப் பிடித்தார்.
1938 – ஓட்டோ ஹான் யுரேனியத்தின் அணுக்கருப் பிளவைக் கண்டுபிடித்தார்.
1941 – இரண்டாம் உலகப் போர்: ஜப்பானியப் படைகள் வடக்கு போர்னியோவில் இறங்கினர்.
1943 – ஐக்கிய அமெரிக்காவில் சீனர்கள் குடியுரிமை பெறுவதற்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டது.
1947 – இலங்கைத் தமிழரசுக் கட்சி ஆரம்பிக்கப்பட்டது.
1957 – அமெரிக்கா முதலாவது கண்டம் விட்டுக் கண்டம் பாயும் அட்லசு ஏவுகணையை வெற்றிகரமாக சோதித்தது.
1960 – எத்தியோப்பியாவின் பேரரசர் முதலாம் ஹைலி செலாசியின் படையினர் டிசம்பர் 13 இல் ஆரம்பமான ஆட்சிக் கவிழ்ப்பு நடவடிக்கையை முறியடித்தனர்.
1960 – செருமனியின் மியூனிக் நகரில் விமானம் ஒன்று தரையில் வீழ்ந்ததில் 20 பயணிகளும், தரையில் 32 பேரும் உயிரிழந்தனர்.
1961 – பிரேசில், இரியோ டி செனீரோ நகரில் வட்டரங்கு களியாட்ட நிகழ்வில் தீப்பிடித்ததில் 500 பேர் வரையில் உயிரிழந்தனர்.
1967 – ஆத்திரேலியப் பிரதமர் ஹரல்ட் ஹோல்ட் விக்டோரியா மாநிலத்தில் கடலில் நீந்தும்போது காணாமல் போனார்.
1969 – ஐக்கிய அமெரிக்க வான் படை அடையாளம் கண்டுபிடிக்க முடியாத பறக்கும் பொருள் பற்றிய ஆய்வை முடித்துக் கொண்டதாக அறிவித்தது.
1970 – போலந்தில் கிதீனியா நகரில் தொடருந்துகளில் இருந்து இறங்கிய தொழிலாளர்களை நோக்கிப் படையினர் சுட்டதில் பலர் கொல்லப்பட்டனர்.
1973 – ரோம் நகர விமான நிலையத்தை பாலத்தீனப் போராளிகள் தாக்கியதில் 30 பயணிகள் கொல்லப்பட்டனர்.
1983 – லண்டனில் ஹரட்ஸ் பல்பொருள் அங்காடியில் ஐரியக் குடியரசுப் படையினரின் குண்டுத் தாக்குதலில் 7 பேர் கொல்லப்பட்டனர்.
1989 – 25 ஆண்டுகளின் பின்னர் பிரேசிலில் முதலாவது பொதுத்தேர்தல் இடம்பெற்றது.
2005 – பூட்டான் மன்னர் ஜிக்மே சிங்கே வாங்சுக் முடிதுறந்தார்.
2009 – லெபனானில் டானி எஃப்11 என்ற கப்பல் கவிழ்ந்ததில் 44 பேர் உயிரிழந்தனர். அத்துடன் 28,000 மிருகங்களும் உயிரிழந்தன.
2010 – முகம்மது பொசீசி என்பவர் தீக்குளித்து இறந்தார். இந்நிகழ்வு துனீசியப் புரட்சி, மற்றும் அரேபிய வசந்தம் ஆகியவற்றிற்கு வழிவகுத்தது.
2014 – ஐக்கிய அமெரிக்காவும் கியூபாவும் 1960 ஆம் ஆண்டிற்குப் பின்னர் முதற்தடவையாக தூதரக உறவைப் புதுப்பித்துக் கொண்டன.

32 minute ago
41 minute ago
48 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
32 minute ago
41 minute ago
48 minute ago