Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2023 நவம்பர் 17 , மு.ப. 01:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
1292 – ஜோன் பலியல் இசுக்காட்லாந்தின் மன்னனாக முடிசூடினார்.
1511 – எசுப்பானியா மற்றும் இங்கிலாந்து ஆகியன பிரான்ஸூக்கு எதிராக அணி திரண்டன.
1558 – இங்கிலாந்தின் முதலாம் மேரி இறக்க அவரது ஒன்றுவிட்ட சகோதரி முதலாம் எலிசபெத் அரசியானார்.
1603 – ஆங்கிலேய நாடுகாண் பயணி, எழுத்தாளர் சர் வால்ட்டர் ரேலி தேசத்துரோகக் குற்றங்களுக்காக விசாரணைக்குட்படுத்தப்பட்டார்.
1796 – பிரெஞ்சுப் புரட்சிப் போர்கள்: பிரெஞ்சுப் படைகள் ஆஸ்திரியர்களை இத்தாலியில் ஆர்க்கோல் என்ற இடத்தில் தோற்கடித்தன.
1800 – ஐக்கிய அமெரிக்க சட்டமன்றம் தனது முதலாவது அமர்வை வாசிங்டன், டி. சி.யில் ஆரம்பித்தது.
1811 – ஒசே மிகுவேல் கரேரா சிலியின் அரசுத்தலைவராகப் பதவியேற்றார்.
1820 – கப்டன் நத்தானியல் பால்மர் அண்டார்ட்டிக்காவை அடைந்த முதலாவது அமெரிக்கர் ஆனார். பால்மர் குடாநாடு இவரது நினைவாகப் பெயரிடப்பட்டது.
1831 – எக்குவாடோர் மற்றும் வெனிசுவேலா ஆகியன பாரிய கொலம்பியாவில் இருந்து பிரிந்தன.
1869 – எகிப்தில், நடுநிலக் கடலையும், செங்கடலையும் இணைக்கும் சுயஸ் கால்வாய் திறக்கப்பட்டது.
1873 – பெஸ்ட், பூடா, ஓபுடா ஆகிய நகரங்கள் இணைக்கப்பட்ட புடாபெஸ்ட் நகரம் அங்கேரியின் தலைநகராக்கப்பட்டது.
1878 – இத்தாலி மன்னர் முதலாம் உம்பேர்ட்டோ மீதான முதலாவது கொலை முயற்சி இடம்பெற்றது. மன்னர் சிறு காயங்களுடன் தப்பினார்.
1903 – உருசியாவின் சமூக சனநாயக தொழிற் கட்சி போல்செவிக் (பெரும்பான்மை), மேன்செவிக் (சிறுபான்மை) என இரண்டாகப் பிளவுண்டது.
1918 – யாழ்ப்பாணத்தில் சூறாவளி மற்றும் வெள்ளம் காரணமாக பலத்த சேதம் ஏற்பட்டது. நூற்றுக்கணக்கானோர் வீடுகளை இழந்தனர். நிவாரண நிதியம் அமைக்கப்பட்டது.
1933 – ஐக்கிய அமெரிக்கா சோவியத் ஒன்றியத்தை அங்கீகரித்தது.
1939 – செக் நாட்டில் நாட்சி எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை அடுத்து 9 மாணவர்கள் தூக்கிலிடப்பட்டனர். ஆயிரத்துக்கும் அதிகமானோர் வதைமுகாம்களுக்கு அனுப்பப்பட்டனர். இந்நாளை நினைவுகூரும் முகமாக அனைத்துலக மாணவர் நாள் பல நாடுகளில் நினைவுகூரப்பட்டு வருகிறது.
1947 – அமெரிக்க அறிவியலாளர்கள் ஜான் பார்டீன், வால்டர் பிராட்டன் ஆகியோர் திரான்சிஸ்டரின் முக்கிய இயல்புகளைக் கண்டறிந்தனர். 20-ஆம் நூற்றாண்டின் மின்னணுவியல் புரட்சி ஆரம்பமானது.
1950 – லாமோ டோண்டிரப் டென்சின் கியாட்சோ என்ற பெயரில் திபெத்தின் 14வது தலாய் லாமாவாக முடிசூடினார்.
1953 – அயர்லாந்து, பிளாசுக்கெட் தீவுகளில் இருந்து அங்கு வாழ முடியாத சூழலில் எஞ்சிய குடிமக்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர்.
1969 – பனிப்போர்: பேரழிவு ஆயுதங்களைக் குறைக்கும் முகமாக சோவியத், அமெரிக்க அதிகாரிகள் எல்சிங்கியில் பேச்சுக்களில் ஈடுபட்டனர்.
1970 – சோவியத்தின் லூனாக்கொட் 1 சந்திரனில் தரையிறங்கியது. தொலைவில் இருந்து இயக்கக்கூடிய தானியங்கி ஒன்று வேறோர் உலகத்துக்கு அனுப்பப்பட்டது இதுவே முதற் தடவை ஆகும்.
1983 – தேசிய விடுதலைக்கான சபடிஸ்டா படை மெக்சிக்கோவில் அமைக்கப்பட்டது.
1989 – பனிப்போர்: செக்கோசிலவாக்கியாவில் இடம்பெற்ற மாணவர் போராட்டம் கலகம் அடக்கும் காவற்துறையினரால் நசுக்கப்பட்டது. ஆனாலும் இந்நிகழ்வு பின்னர் டிசம்பர் 29 இல் கம்யூனிச அரசைக் கவிழ்க்க ஆரம்பமாக அமைந்தது.
1993 – நைஜீரியாவில் இராணுவப் புரட்சி மூலம் அரசு கவிழ்க்கப்பட்டது.
1997 – எகிப்தில், அல்-உக்சுர் நகரில் இசுலாமியப் போராளிகளின் தாக்குதலில் 62 பேர் கொல்லப்பட்டனர்.
2000 – பெருவில் அரசுத்தலைவர் ஆல்பர்ட் புஜிமோரி பதவியில் இருந்து அகற்றப்பட்டார்.
2012 – எகிப்தில் தொடருந்துக் கடவை ஒன்றில் இடம்பெற்ற விபத்தில் 50 பள்ளி மாணவர்கள் உயிரிழந்தனர்.
2013 – உருசியாவில் கசான் விமான நிலையத்தில் தத்தாரிஸ்தான் விமானம் ஒன்று வீழ்ந்ததில் 50 பேர் உயிரிழந்தனர்.
2020- இலங்கை அரசாங்கத்தின் 75 ஆவது வரவு செலவு திட்டம் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவால் சமர்பிக்கப்பட்டது. இத்துடன், மஹிந்த ராஜபக்ஷவால் 11 வரவு செலவு திட்டங்கள் நாடாளுமன்றில் சமர்பிக்கப்பட்டுள்ளன.
• அனைத்துலக மாணவர் நாள் இன்றாகும்
9 hours ago
14 Sep 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
14 Sep 2025