Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2023 நவம்பர் 18 , மு.ப. 01:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
1180 – இரண்டாம் பிலிப்பு பிரான்சின் மன்னராக முடிசூடினார்.
1210 – புனித உரோமைப் பேரரசர் நான்காம் ஒட்டோ திருத்தந்தை மூன்றாம் இன்னொசென்டினால் நீக்கப்பட்டார்.
1421 – நெதர்லாந்தில் கடல் தடுப்புச் சுவர் ஒன்று இடிந்து வெள்ளம் பரவியதில் 10,000 பேர் வரையில் உயிரிழந்தனர்,
1493 – கிறித்தோபர் கொலம்பசு புவேர்ட்டோ ரிக்கோ என இன்றழைக்கப்படும் நாட்டை முதன்முறையாகக் கண்ணுற்றார்.
1494 – பிரெஞ்சு மன்னர் எட்டாம் சார்ல்சு இத்தாலியின் புளோரன்சு நகரைக் கைப்பற்றினார்.
1626 – புதிய புனித பேதுரு பேராலயம் ரோம் நகரில் திறந்து வைக்கப்பட்டது.
1730 – பின்னாளைய புருசிய மன்னர் இரண்டாம் பிரெடெரிக் அரச மன்னிப்புப் பெற்று சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
1803 – எயித்தியப் புரட்சியின் கடைசிப் பெரும் போர் இடம்பெற்றது. இது எயித்தியக் குடியரசு என்ற மேற்கு அரைக்கோளத்தின் முதலாவது கறுப்பினக் குடியரசு அமைக்கப்பட வழிவகுத்தது.
1809 – நெப்போலியப் போர்கள்: வங்காள விரிகுடாவில் இடம்பெற்ற கடற்படைச் சமரில் பிரெஞ்சுக் கடற்படை பிரித்தானிய கிழக்கிந்தியப் படைகளை வென்றது.
1863 – தென்மார்க்கின் ஒன்பதாம் கிறித்தியான் சிலெசுவிக் நகரம் டென்மார்க்குக்குச் சொந்தம் என அறிவிக்கும் சட்டமூலத்துக்கு ஒப்பமிட்டான். இது 1864 இல் செருமனி-டென்மார்க் போர் ஏற்பட வழிவகுத்தது.
1872 – சூசன் பிரவுன் அந்தோனியும் மேலும் 14 பெண்களும் அமெரிக்க அரசுத்தேர்தலில் வாக்களித்தமைக்காகக் கைது செய்யப்பட்டனர்.
1883 – கனடாவும் ஐக்கிய அமெரிக்காவும் ஒரே நேரவலயங்களை வகுத்துக் கொண்டன.
1903 – பனாமா கால்வாய்க்கு தனிப்பட்ட உரிமையை ஐக்கிய அமெரிக்காவுக்கு வழங்கும் உடன்பாடு பனாமாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் கையெழுத்திடப்பட்டது.
1905 – டென்மார்க் இளவரசர் கார்ல் நோர்வே மன்னராக ஏழாம் ஆக்கொன் என்ற பெயரில் முடிசூடினார்.
1909 – நிக்கராகுவாவில் இரண்டு அமெரிக்கர்கள் உட்பட 500 புரட்சியாளர்கள் அரசுப்படையினால் கொல்லப்பட்டதை அடுத்து, ஐக்கிய அமெரிக்கா இரண்டு போர்க் கப்பல்களை அந்நாட்டுக்கு அனுப்பியது.
1918 – லாத்வியா உருசியாவிடம் இருந்து விடுதலையை அறிவித்தது.
1926 – ஜார்ஜ் பெர்னாட் ஷா தனக்கு வழங்கப்பட்ட நோபல் பரிசுப் பணத்தை ஏற்க மறுத்தார்.
1943 – இரண்டாம் உலகப் போர்: பிரித்தானியாவின் 440 போர் விமானங்கள் பெர்லின் மீது குண்டுகளை வீசியதில் 131 பேர் கொல்லப்பட்டனர்.
1961 – அமெரிக்கத் தலைவர் ஜான் எஃப். கென்னடி 18,000 இராணுவ ஆலோசகர்களை தென் வியட்நாமுக்கு அனுப்பினார்.
1963 – முதலாவது தள்ளு-குமிழ் தொலைபேசி சேவையில் ஈடுபடுத்தப்பட்டது.
1971 – ஓமான் பிரித்தானியாவிடம் இருந்து விடுதலையை அறிவித்தது.
1988 – அமெரிக்காவில் போதைப் பொருள் கடத்தல்காரர்களுக்கு மரணதண்டனை வழங்க அரசுத்தலைவர் ரானல்ட் ரேகன் ஒப்புதல் அளித்தார்.
1989 – கோபெ செயற்கைமதி விண்வெளிக்கு ஏவப்பட்டது.
1993 – தென்னாப்பிரிக்காவில் வெள்ளையின சிறுபான்மை ஆட்சிக்கு முடிவு ஏற்பட வழிவகுத்த புதிய அரசியலைப்புக்கு 21 அரசியல் கட்சிகள் இணைந்து ஒப்புதல் அளித்தன.
1996 – பிரான்சில் இருந்து இங்கிலாந்துக்கு கால்வாய் சுரங்கம் வழியாகச் சென்ற தொடருந்து ஒன்று தீப்பற்றியதில் பலர் காயமடைந்தனர்.
2006 – ஈழப்போர்: மன்னார்க் கடற்பரப்பில் இடம்பெற்ற மோதலில் இலங்கைக் கடற்படையினர் 10 பேர் கொல்லப்பட்டு 3 விடுதலைப் புலிகள் காயமடைந்தனர்.
2013 – அமெரிக்காவின் நாசா நிறுவனம் மாவென் விண்கலத்தை செவ்வாய் நோக்கி ஏவியது.
2019- இலங்கையின் 7 ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ஷ பதவியேற்றார்.
9 hours ago
14 Sep 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
14 Sep 2025