2024 மே 02, வியாழக்கிழமை

வரலாற்றில் இன்று : மார்ச் 19

Janu   / 2024 மார்ச் 19 , மு.ப. 01:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

1279: யேமன் சமரில் மொங்கோலியர்கள் வென்றதால் சீனாவின் சோங் வம்ச ஆட்சி முடிவுக்கு வந்தது.

1916:8 மெக்ஸிகோ புரட்சித் தளபதி பன்சோ வில்லாவை கைது செய்வதற்காக 8 அமெரிக்க விமானங்கள் கிளம்பின. அமெரிக்க வரலாற்றில் முதல் விமான தாக்குதல் பயணம் இது.

1932: சிட்னி துறைமுக பாலம் திறக்கப்பட்டது.

1944: ஹங்கேரி மீது ஜேர்மனி படையெடுத்தது.

1945: அமெரிக்க கடற்படைக் கப்பலான யூ.எஸ்.எஸ். பிராங்களின் மீது ஜப்பானிய விமானமொன்று தாக்கியதால் 724 பேர் பலி.

1945: ஜேர்மனியின் தொழிற்சாலைகள், இராணுவ முகாம்கள், கடைகள், போக்குவரத்து தொழில்நுட்ப நிறுவனங்கள் அனைத்தையும் அழிக்குமாறு ஜேர்மன் சர்வாதிகாரி அடோல்வ் ஹிட்லர் உத்தரவிட்டார்.

2002: பொதுநலவாய அமைப்பிலிருந்த ஸிம்பாப்வே நீக்கப்பட்டது.

2003: ஈராக்கிற்கு எதிராக யுத்தத்தை ஆரம்பிக்குமாறு அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் டபிள்யூ புஷ் உத்தரவிட்டார்.

 

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .