Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 06, செவ்வாய்க்கிழமை
Editorial / 2018 மே 21 , மு.ப. 12:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
1904: பாரிசில், பன்னாட்டுக் கால்பந்துச் சங்கங்களின் கூட்டமைப்பு (பீஃபா) ஆரம்பிக்கப்பட்டது.
1972: மைக்கல் அஞ்சலோவின் பியேத்தா ஓவியம், உரோம் நகரில் புனித பேதுரு பேராலயத்தில், மனநிலை பாதிக்கப்பட்ட அங்கேரிய நிலவியலாளர் ஒருவரால் சேதப்படுத்தப்பட்டது.
1976: கலிபோர்னியாவில், பஸ் ஒன்று விபத்துக்குள்ளானதில், 29 பேர் உயிரிழந்தனர்.
1991: முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி, சென்னைக்கருகில் மனிதக் குண்டுவெடிப்பொன்றில் கொல்லப்பட்டார்.
1996: தன்சானியாவில், பூக்கோவா என்ற பயணிகள் கப்பல், விக்டோரியா ஏரியில் மூழ்கியதில் 1,000 பேர் வரையில் உயிரிழந்தனர்.
1998: இந்தோனேசியாவில் ஒரு வாரமாக இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்களை அடுத்து, அந்நாட்டை 32 ஆண்டுகள் ஆட்சி செய்த சுகார்த்தோ அரசுத்தலைவர் பதவியில் இருந்து விலகினார்.
2001: பிரான்சில், அத்திலாந்திக் அடிமை வணிகம், மற்றும் அடிமைத் தொழில்கள், மானுடத்துக்கு எதிரான குற்றங்களாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.
2003: வடக்கு - அல்ஜீரியாவில் நிகழ்ந்த 6.8 அளவு நிலநடுக்கத்தில் 2,000 பேருக்கு, மேல் கொல்லப்பட்டனர்.
2006: செர்பியா - மொண்டெனேகுரோவில் இருந்து விலகுவதற்கான பொது வாக்கெடுப்பு, மொண்டெனேகுரோ குடியரசில் இடம்பெற்றது. 55% மக்கள் பிரிந்து செல்வதற்கு ஆதரவாக வாக்களித்தனர்.
2012: யேமன், சனா நகரில் இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதலில், 120 பேர் கொல்லப்பட்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
47 minute ago
52 minute ago
1 hours ago