J.A. George / 2022 பெப்ரவரி 17 , பி.ப. 02:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
அருட்தந்தை ஜூட் கிரிஷாந்த இன்று (17) குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு வந்து மூன்று மணிநேர வாக்குமூலமொன்றை வழங்கினார்.
ஏப்ரல் 21 தாக்குல் சம்பவம் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொறுப்புக்கூற வேண்டும் என, சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க வெளியிட்ட கருத்து தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்குமாறு அருட்தந்தை ஜூட் கிரிஷாந்த குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு செய்திருந்தார்.
கடந்த டிசெம்பர் 10ஆம் திகதி செய்யப்பட்ட இந்த முறைப்பாடு தொடர்பில் வாக்குமூலம் பெற்றுக்கொள்ள அருட்தந்தை ஜூட் கிரிஷாந்த, குற்றப்புலானாய்வு பிரிவுக்கு இன்று(17) அழைக்கப்பட்டிருந்தார்.
அதன்படி, முற்பகல் 9.45 மணியளவில் குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு அருட்தந்தை ஜூட் கிரிஷாந்த வந்திருந்தார்.
அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவின் கருத்து மற்றும் ஏப்ரல் தாக்குதல் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணை நடத்துமாறும், சட்டநடவடிக்கை எடுக்குமாறும் தாம் கோரியுள்ளதாக அருட்தந்தை ஜூட் கிரிஷாந்த தெரிவித்தார்.
குற்றப் புலனாய்வுப் பிரிவிலிருந்து வெளியேறிய பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடங்களை குறிப்பிட்டார்.
13 minute ago
29 minute ago
38 minute ago
58 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
29 minute ago
38 minute ago
58 minute ago