Mayu / 2026 மே 05 , பி.ப. 02:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
திருகோணமலை, கிண்ணியா - சூரங்கள் பிரதான வீதியில் இன்று (05) காலை இடம்பெற்ற வீதி விபத்தில் இருவர் காயமடைந்துள்ளனர்.
சம்பவம் குறித்துத் தெரியவருவதாவது:
இன்று காலை சூரங்கள் பிரதான வீதியில் பயணித்த முச்சக்கர வண்டியும், மோட்டார் சைக்கிளும் எதிர்பாராத விதமாக ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகின. இந்த விபத்தில் முச்சக்கர வண்டி மற்றும் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர்கள் காயமடைந்துள்ளனர்.
விபத்தையடுத்து, அங்கிருந்தவர்களால் காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு உடனடியாக கிண்ணியா தள வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்தின் காரணமாக குறித்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்துப் பாதிப்பு ஏற்பட்டது.
சம்பவம் தொடர்பில் கிண்ணியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். வாகனங்களின் அதீத வேகம் அல்லது கவனக்குறைவு விபத்திற்குக் காரணமா என்பது குறித்துப் பொலிஸார் ஆராய்ந்து வருகின்றனர்.
4 hours ago
4 hours ago
5 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
5 hours ago
5 hours ago