2026 மே 15, வெள்ளிக்கிழமை

dd

தேர்தல் வெற்றிக்குச் சிரித்த முகத்துடன் வாழ்த்து

Mayu   / 2026 மே 04 , பி.ப. 04:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், தேர்தலில் பல தொகுதிகளில் அமோக வெற்றி பெற்றுள்ள நிலையில், திரையுலகினர் பலரும் அவருக்குத் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், நடிகை த்ரிஷா இன்று நேரில் சென்று விஜய்க்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

விஜய்யின் இல்லத்திற்குச் சென்ற த்ரிஷா, அவரது வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பாராட்டியுள்ளார். சந்திப்பிற்குப் பிறகு வெளியே வந்த த்ரிஷா, மிகுந்த மகிழ்ச்சியுடனும் சிரித்த முகத்துடனும் காணப்பட்டார்.

திரைத்துறையில் விஜய்யின் நீண்டகாலத் தோழியாகவும், வெற்றி நாயகியாகவும் வலம் வரும் த்ரிஷா, நேரில் சென்று வாழ்த்து தெரிவித்துள்ள நிகழ்வு தற்போது சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளது. இவர்களது சந்திப்பு குறித்த புகைப்படங்கள் மற்றும் தகவல்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .