2026 மே 10, ஞாயிற்றுக்கிழமை

பனை மரத்துடன் மினி வேன் மோதி 9 பேர் காயம்

Mayu   / 2026 மே 10 , பி.ப. 02:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

மன்னார் - தலைமன்னார் பிரதான வீதியில் இன்று (10) இடம்பெற்ற  விபத்தில் தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றும் தொழிலாளர்கள் 9 பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 
தலைமன்னார் வீதியில் அமைந்துள்ள கரிசல் பகுதியில் இன்று காலை மினி வான் ஒன்று பயணித்துக் கொண்டிருந்த போது, திடீரென கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி அருகில் இருந்த பனை மரம் ஒன்றுடன் பலமாக மோதியுள்ளது.
 
இந்த விபத்து இடம்பெற்ற போது வாகனத்தில் தனியார் நிறுவனம் ஒன்றில் கடமைக்காக சென்று கொண்டிருந்த தொழிலாளர்களே இருந்துள்ளனர். 
 
விபத்தில் சிக்கிய 9 பேரும்  காயங்களுக்கு உள்ளாகிய நிலையில் மீட்கப்பட்டு, உடனடியாக மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
 
எஸ்.ஆர்.லெம்பேட்

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .