J.A. George / 2022 செப்டெம்பர் 01 , பி.ப. 02:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
முன்னாள் அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே கொலைச் சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த கம்பஹா முன்னாள் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் லக்ஷ்மன் குரே மற்றும் முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர் மொரிஸ் என்று அழைக்கப்படும் செல்வராஜா பிரபாகரன் ஆகியோ விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களை விடுதலை செய்யுமாறு கம்பஹா மேல் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
2008 ஆம் ஆண்டின் ஏப்ரல் மாதம் 6 ஆம் திகதி வெலிவேரிய பகுதியிலுள்ள மைதானமொன்றிற்கு அருகில் தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளே உள்ளிட்ட 14 பேர் கொலை செய்யப்பட்டதுடன் மேலும் சிலர் காயமடைந்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக கம்பஹா முன்னாள் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் லக்ஷ்மன் குரே மற்றும் முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்கள் இருவருக்கு எதிராக சட்ட மா அதிபரினால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
8 minute ago
19 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
19 minute ago
1 hours ago