Mayu / 2026 மார்ச் 29 , மு.ப. 10:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஐபிஎல் 19-வது சீசனின் தொடக்க ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) அணிகள் மோதின. இந்தப் போட்டியில் ஆட்டத்தை விடவும், கேலரியில் இருந்த பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவின் ரியாக்ஷன்களே சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில், ஹைதராபாத் அணி துடுப்பெடுத்தாடிக்கொண்டிருந்தபோது ஒரு சுவாரசியமான சம்பவம் நடந்தது. அனிகேத் வர்மா அடித்த பந்தை பிடிக்க முயன்ற விராட் கோலி, எதிர்பாராத விதமாக அந்த எளிதான கேட்ச்சை நழுவவிட்டார். களத்தில் கோலி கேட்ச்சை விடுவது மிகவும் அரிதான ஒன்று என்பதால் அவரே ஒரு நிமிடம் அதிர்ச்சியில் உறைந்தார்.
அதே சமயம், கேமராக்கள் கேலரியில் இருந்த அனுஷ்கா சர்மாவைக் காட்டின. தன் கணவர் பந்தை விட்டதைக் கண்டு வருத்தப்படாமல், அனுஷ்கா விழுந்து விழுந்து சிரித்த காட்சி ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது. "கணவன்-மனைவிக்குள் இருக்கும் அந்த அழகான புரிதலை இது காட்டுகிறது" என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
1 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
3 hours ago