2023 ஜூன் 02, வெள்ளிக்கிழமை

தேர்தல் அதிகாரிகள் இருவருக்கு உயிர் அச்சுறுத்தல்

J.A. George   / 2023 ஜனவரி 19 , பி.ப. 12:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

தேர்தல் கடமைகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் தேர்தல் ஆணைக்குழுவின் அதிகாரிகள் இருவருக்கு உயிர் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக  பெப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.

ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இன்று(19) இதனைக் கூறினார். இது தொடர்பில் அந்த அதிகாரிகளில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இவ்வாறான நிலையில், குறித்த அதிகாரிகளின் பாதுகாப்பினை உறுதிப்படுத்தி அவர்கள் சுயாதீனமான முறையில் செயற்பட இடமளிக்குமாறு அவர் கேட்டுக்கொண்டார்.

இதேவேளை, இவ்வாறான சம்பவம் தொடர்பில் தனக்கும் தகவல் கிடைத்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பாராளுமன்றில் இன்று கூறினார்.

இவ்வாறான நடவடிக்கைகள் ஊடாக உள்ளூராட்சி மன்றத் தேர்தல் ஒத்திவைக்க அரசாங்கம் மறைமுக நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக அவர் குற்றம் சுமத்தினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .