2021 டிசெம்பர் 07, செவ்வாய்க்கிழமை

’இன்று வந்தனர்; நாளையும் வருவார்கள்’’

J.A. George   / 2021 ஓகஸ்ட் 12 , பி.ப. 05:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

இராணுவத்தினரால் நடமாடும் சேவை ஊடாக தடுப்பூசி வழங்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 

வடகொழும்பு பகுதியில் இன்று(12) ஆரம்பிக்கப்பட்ட இந்த நடமாடும் சேவை, நாளை (13)  கொழும்பு தெற்கு பகுதியில் முன்னெடுக்கப்படும் என்று இராணுவத்தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்தார்.

அதற்கமைய தெரிவு செய்யப்பட்ட குறிப்பிட்ட குழுவினருக்கு நேற்று(11) தொலைபேசி ஊடாக எந்த நேரத்திற்கு தடுப்பூசி வழங்கும் குழுவினர் வருகை தருவார்கள் என்பது அறிவிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

மேலும், குறித்த நடமாடும் சேவை ஊடாக தடுப்பூசியைப் பெற்றுக் கொள்ள எதிர்பார்ப்பவர்கள்  1906 அல்லது 011 2860002 ஆகிய இலக்கங்கள் ஊடாக தொடர்பு கொண்டு  முன்பதிவு செய்துகொண்ட பின்னர் தடுப்பூசிகள் வீட்டிற்கே வந்து வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .