2022 ஜனவரி 25, செவ்வாய்க்கிழமை

பணப்பையை குரங்கிடம் பறிகொடுத்த நபர் (Video)

J.A. George   / 2021 டிசெம்பர் 01 , மு.ப. 10:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

பகமுன பொலிஸ் நிலையத்துக்கு வந்த நபர் ஒருவரின் பணப்பையை குரங்கு ஒன்று திருடியுள்ள சம்பவமொன்று ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

தான் கொண்டு வந்த பையை பொலிஸ் நிலையத்துக்கு வெளியே நிறுத்தி வைத்த தனது மோட்டார் சைக்கிளில் வைத்து விட்டு பொலிஸ் நிலையத்துக்கு  சென்றதாக பாதிக்கப்பட்ட நபர் தெரிவித்துள்ளார்.

பொலிஸ் நிலையத்திலிருந்து திரும்பியதும், பணப்பையை எடுத்துக்கொண்டு ஒரு குரங்கு, மரத்தின் மீது ஏறுவதை அவர் கண்டுள்ளார். 

2000 ரூபாய் பணம், ஓட்டுநர் உரிமம், தேசிய அடையாள அட்டை, வங்கி அட்டைகள் மற்றும் தனிப்பட்ட ஆவணங்கள் உள்ளிட்டவைகள் அவரது பணப்பையில் இருந்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.

எனினும், குரங்கிடம் இருந்து பணப்பையை பெற முடியாது போனதால்,  காணாமல் போன பொருட்கள்,  ஆவணங்கள்  குறித்து பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X