2022 ஜனவரி 25, செவ்வாய்க்கிழமை

150 அடி பள்ளத்தில் பஸ் விழுந்து விபத்து; சாரதி பலி (வீடியோ)

J.A. George   / 2021 ஜூன் 18 , பி.ப. 01:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

பலாங்கொடை - ராசாகலை வீதியில் எல்லேவத்த பகுதியில் சுமார் 150 அடி பள்ளத்தில் பஸ் ஒன்று விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

நேற்று (17) மாலை இடம்பெற்ற இந்த விபத்தினையடுத்து குறித்த சாரதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோது உயிரிழந்துள்ளார்.

தேயிலை தொழிற்சாலையொன்றின் ஊழியர்களை வீடுகளில் கொண்டுசேர்த்துவிட்டு திரும்பியபோதே இந்த விபத்து நேர்ந்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சம்பவத்தின்போது, சாரதி மாத்திரமே பஸ்ஸில் இருந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X