2025 செப்டெம்பர் 11, வியாழக்கிழமை

பெரும்பான்மைக் கட்சிகள் இனவாதத்தைக் கைவிட்டால் எமது கட்சியை கலைத்துவிடத் தயார்- மனோ கணேசன்

A.P.Mathan   / 2010 ஜூலை 22 , பி.ப. 03:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

“ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி போன்ற பெரும்பான்மை தேசிய கட்சிகள் பேசும் ஐக்கியமும் தேசியமும் சிங்கள பௌத்த தேசியவாதமே. அதனால்தான் தமிழ்பேசும் மக்கள் வேறுவழியின்றி தமிழ்க் கட்சிகளையும் முஸ்லிம் கட்சிகளையும் உருவாக்கினார்கள்.  அக்கட்சிகள் தமது இனவாதக் கொள்கைகளை கைவிடத் தயாரானால் நாம் எமது கட்சியை கலைத்துவிட்டு அந்த பெரும்பான்மைக் கட்சிகளுடன் இணைந்து கொள்ளத் தயாராக இருக்கிறோம்.”

- இவ்வாறு ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் 'தமிழ் மிரர்' இணையத்தளத்திற்கு கடந்த புதன்கிழமை (22) வழங்கிய விசேட நேர்காணலில் தெரிவித்தார்.

அதிகாரப் பரவலாக்கம் என்பது வடக்கு கிழக்குகிற்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டுவிடக் கூடாது. வடக்கு கிழக்கில் சிறுபான்மையாகவுள்ள சிங்கள மக்களின் உரிமைகள் உறுதிப்படுத்த வேண்டுமென்பது நியாயமென்றால், வடக்கு கிழக்கிற்கு வெளியே வாழ்கின்ற இந்திய வம்சாவளி மலையக மக்களின் உரிமைகளும் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்பது நியாயமானதே எனவும் அவர் தெரிவித்தார்.

மனோ கணேசன் வழங்கிய நேர்காணலின் முழுவிபரத்தை காணொளியில் காணலாம்.


  Comments - 0

  • Ossan Salam - Qatar Friday, 23 July 2010 03:58 PM

    முதலில் பாராளுமன்றதிற்குள் நுழையும் வழிவகைகளை பாருங்கள் ஐயா!

    Reply : 0       0

    Thilak Friday, 23 July 2010 07:53 PM

    தமிழ்ப்பேசும் மக்களின் உரிமைகளுக்காக குரல்கொடுக்கும் மனோ கணேசனுக்கு நன்றி!

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .