2025 செப்டெம்பர் 11, வியாழக்கிழமை

கே.பிக்கு அதிக முக்கியத்தும் கொடுத்து பார்ப்பது முட்டாள்தனமானது -பிரதியமைச்சர் முரளிதரன்

A.P.Mathan   / 2010 ஜூலை 26 , பி.ப. 03:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் சர்வதேச பொறுப்பாளரான கே.பி. என்றழைக்கப்படும் குமரன் பத்மநாதனை அதிக முக்கியத்தும் கொடுத்து பேசுவது முட்டாள்தனமானது என மீள்குடியேற்ற விவகார பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன், 'தமிழ் மிரர்' இணையத்தளத்திற்கு அளித்த விசேட நேர்காணலில் கூறினார்.

தான், புலிகள் அமைப்பிலிருந்த போது தான் கே.பி.யை சந்தித்துள்ளதாகவும் ஆனால் கே.பி. கைது செய்யப்பட்ட பின்னர் அவரை சந்திக்கவில்லை எனவும் பிரதியமைச்சர் முரளிதரன் மேலும் தெரிவித்தார்.

கே.பி. வடபகுதி அபிவிருத்திக்குப் பொறுப்பாக நியமிக்கப் போவதாக வெளியான செய்தி குறித்து கேட்டபோது,
“இவை அனைத்தும் தவறான விடயம். இதேபோன்று கே.பியை முதலமைச்சராக அரசாங்கம் நியமிக்கப்போவதாக சரத் பொன்சேகா கூறினார். அடுத்த நாளே அதற்கு அரசாங்கம் மறுப்புத் தெரிவித்தது. கே.பியை அந்தளவுக்கு முக்கியத்தும் கொடுத்து பார்ப்பது தவறானதும் முட்டாள் தனமானதுமாகும். கே.பி. இலங்கை சட்டத்திட்டங்களின் கீழ் கைது செய்யப்பட்ட ஒருவர். அரசாங்கத்தை குற்றம் சுமத்துவதற்காக சிலர் இவ்வாறான கதைகளை கூறுகிறார்கள். ஆனால் அவர் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளார். அவரை அரசாங்கம் பயன்படுத்திக்கொள்ள முடியும். அவர் கைதி என்பதால் அரசாங்கத்திற்கு ஒத்துழைக்க வேண்டிய தேவை இருக்கிறது அது வேறு விடயம்” என பிரதியமைச்சர் முரளிதரன் பதிலளித்தார்.

இடம்பெயர்ந்த மக்களின் மீள்குடியேற்றத்தை முழுமைப்படுத்துவதற்கு 5 வருடங்கள்வரை தேவைப்படலாம் எனக் கூறிய அவர், வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்டு புத்தளத்தில் தங்கியுள்ள முஸ்லிம்கள் மீண்டும் வடக்கில் குடியேறினால் அவர்களுக்கு வழங்கப்பட்ட வீடுகளை திருப்பிக்கொடுக்க வேண்டும் என தான் கூறியதாக வெளியான செய்திகளையும் நிராகரித்தார்.

தமிழீழ விடுதலைப் புலிகள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டவர்களின் விடுதலை விவகாரம், பாதுகாப்பு வலயப் பகுதிகளில் மீள்குடியேற்றம் உட்பட பல விடயங்கள் குறித்து அவர் வழங்கிய செவ்வியை காணொளியில் காணலாம்.


  Comments - 0

  • srikant Tuesday, 27 July 2010 08:50 PM

    அதுதானேஎப்படி முக்கியத்துவம் கொடுக்கஇயலும்,நீங்கள்எல்லாம் புலிப்படையை முறியடிக்க கைகொடுத்தவர்கள் அல்லவா!உங்களுக்கு ஈடாவார்களா புலிப்படை. தோல்வி அடைந்தபின் வந்தவர்கள்,கைது செய்யப்பட்டவர் சரணாகதி அடைந்தவரைவிட மேலானவரா கீழானவரா? முன்னாள் புலிகளில் எத்தனை தராதரங்கள் இருக்கின்றன? யுத்தத்துக்குமுன் வந்தவர்கள், யுத்தத்தில் சரணடைந்தவர்கள், இராணுவத்தால் பிடிக்கப்பட்டவர்கள், பொலீசில் மாட்டிக்கொண்டவர்கள், யுத்தம் முடிந்தபின் சரணடைந்தவர்கள் என்று,அத்தோடு சேர்த்துக்கொள்ளவேண்டும் வெற்றிக்கு பின் வெளிநாடுகளில்இருந்து வந்தவர்...

    Reply : 0       0

    soosai fernando Wednesday, 28 July 2010 12:50 AM

    தமிழ் மக்கள் ஒன்றும் ஏமாளிகள் இல்லை. அவர்களுக்கு நன்றாகவே தெரியும். ஒரு சின்ன உதாரணம் ஒருகாலத்தில் சொல்லின் செல்வர் என்றெல்லாம் பெரிதாக மதிக்கப்பட்ட ராசதுரை இன்று எங்கே? ஒன்று மட்டும் உண்மை யாரும் வரலாறில் இருந்து பாடம் படிப்பதே இல்லை.

    Reply : 0       0

    Saleem Thursday, 29 July 2010 08:29 AM

    ஒரு தமிழன் இன்னொரு தமிழனுக்கு முக்கியம் கொட்டுக்கமாட்டான்.
    , அதனாற்றான் பல கட்சிகளும் பல தலைவர்களும் ஒருவருக்கொருவர் போட்டி போடுகிறார்கள், காட்டிக்கொடுக்கிறார்கள்.

    Reply : 0       0

    sheen Friday, 30 July 2010 09:47 PM

    கே பீக்கு அவ்வாறான அரசியலில் குதிக்கும் ஆசை இருக்கிறது போல் தெரிகிறது, அவரது ஊடக பேட்டியின் மூலம் விளங்குகிறது.

    Reply : 0       0

    C.Senthilan Sunday, 01 August 2010 01:01 AM

    இவரைவிட அவர் விஞ்சி விடுவார் என்று பயமோ?

    Reply : 0       0

    raju Sunday, 15 August 2010 05:18 AM

    என்னை மிஞ்சி எவன் வருவான் ?? பழைய ஞாபகங்கள் மீண்டும் வருது ...

    Reply : 0       0

    thevagar Saturday, 21 August 2010 12:31 PM

    இரண்டும் சாக்கடைகள் தானே

    Reply : 0       0

    Selvarajah Sunday, 05 September 2010 03:20 AM

    இலங்கையின் வட கிழக்கில் வாழ்கின்ற தமிழ் மக்களிற்கு பிரிந்து போகும் உரிமை உட்பட சுய நிர்ணய உரிமை உள்ளது என்பதை இவர்கள் இருவரில் யாராவது ஏற்றுக் கொள்கிறார்களா என்பதே மிக முக்கியமானது.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .