Mayu / 2026 மார்ச் 30 , மு.ப. 10:23 - 0 - {{hitsCtrl.values.hits}}

மலேசியாவின் கோலாலம்பூரிலிருந்து இலங்கைக்கான ஏர் பாட்டிக் (Batik Air) நிறுவனத்தின் கன்னிப் பயண விமானம் (Inaugural Flight) இன்று அதிகாலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தது.
கோலாலம்பூரிலிருந்து புறப்பட்ட OD-297 என்ற இலக்கத்தைக் கொண்ட போயிங்-737 (Boeing-737) ரக விமானம், இன்று (30) அதிகாலை 01:10 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது. இந்த விமானத்தில் 62 பயணிகளும் 4 பணியாளர்களும் வருகை தந்திருந்தனர்.

இதற்கமைய குறித்த விமானம் அதிகாலை 02:05 மணிக்கு 160 பயணிகளுடன் குறித்த விமானம் கோலாலம்பூர் நோக்கிப் புறப்பட்டது.
கோலாலம்பூர் மற்றும் கொழும்பு இடையிலான இந்த விமான சேவை வாரத்திற்கு நான்கு நாட்கள் சுமார் 3 மணித்தியாலங்கள் இடம்பெறவுள்ளது. (திங்கள், செவ்வாய், வியாழன் மற்றும் சனிக்கிழமை)

புதிய விமான சேவையின் ஆரம்பத்தை முன்னிட்டு கட்டுநாயக்க விமான நிலையத்தில் விசேட வரவேற்பு நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் இலங்கைக்கான மலேசிய உயர்ஸ்தானிகர் பெட்லி ஹிஷாம் பின் ஆடம் (Bedli Hisham Bin Adam) உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
இந்த புதிய நேரடி விமான சேவையானது இரு நாடுகளுக்கும் இடையிலான சுற்றுலா மற்றும் வர்த்தக உறவுகளை மேலும் வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டி.கே.ஜி. கபில
7 minute ago
42 minute ago
53 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
42 minute ago
53 minute ago
1 hours ago