2026 மே 04, திங்கட்கிழமை

அறிவாலயத்தில் அதிரடி மாற்றம்

Mayu   / 2026 மே 04 , பி.ப. 03:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

சென்னை, தேனாம்பேட்டையில் உள்ள தி.மு.க. தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் அமைக்கப்பட்டிருந்த பிரம்மாண்ட பந்தல்கள் தற்போது அகற்றப்பட்டு வருகின்றன.

அண்மைக்காலமாக அங்கு நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளுக்காகவும், தொண்டர்களின் வசதிக்காகவும் இந்தப் பந்தல்கள் அமைக்கப்பட்டிருந்தன.

பந்தல்களுடன் சேர்த்து, முக்கிய அறிவிப்புகள் மற்றும் நிகழ்வுகளை நேரலையாக ஒளிபரப்ப வைக்கப்பட்டிருந்த ராட்சத 'LED' திரைகளும் நீக்கப்பட்டுள்ளன.

கட்சி அலுவலக வளாகத்தை மீண்டும் பழைய நிலைக்குக் கொண்டு வரும் நோக்கில் இப்பணிகள் நடைபெற்று வருவதாகத் தெரிகிறது. திடீரென மேற்கொள்ளப்பட்டு வரும் இந்த மாற்றங்கள் அங்கிருந்த தொண்டர்களிடையே சற்றே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .