Mayu / 2026 மே 06 , மு.ப. 11:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
திருகோணமலை, அனுராதபுர சந்திப் பகுதியில் அரங்கேறியுள்ள துணிகரக் கொள்ளைச் சம்பவம் அப்பகுதி வர்த்தகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று (05) அதிகாலை சுமார் 2.30 மணியளவில், அனுராதபுர சந்தியில் அமைந்துள்ள இரண்டு கடைகளின் பூட்டுக்களை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர் ஒருவர், அங்கிருந்த பணம் மற்றும் பெறுமதிமிக்க பொருட்களைக் கொள்ளையிட்டுச் சென்றுள்ளார்.
இந்தக் கொள்ளைச் சம்பவம் தொடர்பான காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி (CCTV) கேமராவில் தெளிவாகப் பதிவாகியுள்ளது. இந்த ஆதாரங்களைக் கொண்டு திருகோணமலை பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
குற்றவாளியை விரைவாகக் கண்டறிய பொதுமக்களின் ஒத்துழைப்பை பொலிஸார் நாடியுள்ளனர்: இந்தக் காணொளியில் அல்லது புகைப்படத்தில் காணப்படும் நபரை அடையாளம் தெரிந்தால், உடனடியாக அருகில் உள்ள பொலிஸ் நிலையத்திற்குத் தகவல் வழங்கவும். குற்றவாளி பிடிபட இந்தச் செய்தியை அதிகளவில் பகிர்ந்து (Share) உதவுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்.
31 minute ago
1 hours ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
31 minute ago
1 hours ago
1 hours ago
2 hours ago