J.A. George / 2022 ஜூலை 18 , பி.ப. 12:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
எரிபொருள் விலை குறைப்பு காரணமாக பஸ் கட்டணத்தை திருத்தியமைக்க தயாராக இருப்பதாக தனியார் பஸ் சங்கங்கள் தெரிவிக்கின்றன.
தேசிய கொள்கைக்கு அமைவாக இந்தக் கட்ட திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டுமென அகில இலங்கை தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தின் செயலாளர் அஞ்சன பிரியஞ்சித் தெரிவித்தார்.
தேசிய பஸ் கட்டணக் கொள்கையில் கூறப்பட்டுள்ளபடி டீசல் விலை 4% அதிகரித்தாலோ அல்லது குறைந்தாலோ நிச்சயமாக பஸ் கட்டணத்தில் திருத்தம் மேற்கொள்ள வாய்ப்பு உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, உரிய முறையில் எரிபொருள் வழங்கினால் பஸ் கட்டணத்தை குறைக்க தயார் என இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .