Mayu / 2026 மார்ச் 29 , பி.ப. 01:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாட்டில் நிலவும் வறட்சி காலநிலை காரணமாக மலையகத்தில் உள்ள சில நீர் நிலைகளில் நீர் வற்றியுள்ளது. அதற்கமைய, நோர்ட்டன் விமலசுரேந்திர நீர்மின் உற்பத்தி நிலையத்திற்கு நீர் வழங்கும் காசல்ரி நீர்தேக்கத்தின் நீர் மட்டம் 40 அடிவரை குறைவந்துள்ளது.
இந்நிலையில், ஒரு அடி நீர் மட்டம் குறைவடையும் பட்சத்தில் 25 ஆயிரம் மொகா வேல்ட் நீர் மின் உற்பத்தியை வழங்கும் விமலசுரேந்திர மின் உற்பத்தி நிலையத்தில் மின்சார உற்பத்தி பாதிப்படையும் சாத்தியம் ஏற்பட்டும் என மின்சாரசபை அதிகாரியொருவர் தெரிவித்தார்
இதேவேளை, மஸ்கெலியா மவுசாகலை,மேல் கொத்மலை மற்றும் கெனியன் நீர் தேக்கங்களிலும் நீர் மட்டம் வெகுவாக குறைவடைந்துள்ளது.
எனவே மின் பாவனையாளர்கள் வீடுகள், காரியாலயங்களிலும் மின் பாவனையை சிக்கனமாக பயன்படுத்துமாறு அரசாங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நோர்ட்டன் பிரிட்ஜ் நிருபர்
9 hours ago
29 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
29 Mar 2026