Mayu / 2026 ஏப்ரல் 26 , பி.ப. 02:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி மற்றும் இங்கிலாந்தின் முன்னணி வீரர் ஜோ ரூட் ஆகியோரில் யார் சிறந்தவர் என்பது குறித்து மைக்கேல் வாகன் வெளியிட்ட கருத்து கிரிக்கெட் ரசிகர்களிடையே பேசுபொருளாகியுள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை (24) நடைபெற்ற குஜராத் டைட்டன்ஸ் (GT) அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணியின் விராட் கோலி தனது அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 44 பந்துகளில் 81 ஓட்டங்களை விளாசி ரசிகர்களை உற்சாகப்படுத்தினார்.
கோலியின் இந்த நேர்த்தியான ஆட்டத்தைக் கண்டு வியந்த இங்கிலாந்து வீரர் சாம் பில்லிங்ஸ் (Sam Billings), தனது எக்ஸ் (X) தளத்தில், "முழு ஃபார்மில் இருக்கும் விராட் கோலியின் ஆட்டத்தைப் பார்ப்பதை விடச் சிறந்த ஒன்று இருக்க முடியுமா?" எனக் கேள்வி எழுப்பியிருந்தார்.
இதற்குப் பதிலளித்த மைக்கேல் வாகன், ஒற்றைச் சொல்லில் "ஜோ ரூட்" (Joe Root) எனப் பதிவிட்டார். கோலியை விட ஜோ ரூட்டின் ஆட்டமே சிறந்தது என வாகன் மறைமுகமாகக் குறிப்பிட்டது, இந்திய ரசிகர்களிடையே கடும் விவாதத்தைத் தூண்டியுள்ளது.
வாகனின் இந்தப் பதிலைத் தொடர்ந்து, கோலி மற்றும் ரூட் ஆகிய இருவரின் புள்ளிவிபரங்களை ஒப்பிட்டு ரசிகர்கள் சமூக வலைதளங்களில் மோதி வருகின்றனர். ஏற்கனவே அவ்வப்போது சர்ச்சைக்குரிய கருத்துகளைத் தெரிவிக்கும் வாகன், தற்போது கோலி விவகாரத்திலும் தனது 'பழைய பாணியை' கையாண்டுள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.
39 minute ago
43 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
39 minute ago
43 minute ago
2 hours ago