2025 ஓகஸ்ட் 10, ஞாயிற்றுக்கிழமை

சதுப்பு நிலத்தில் காட்டு யானையின் சடலம் மீட்பு

J.A. George   / 2025 ஓகஸ்ட் 04 , மு.ப. 10:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

தனமல்வில அம்பேகமுவ பகுதியில் உள்ள கரமெட்டிய குளத்துக்கு அருகிலுள்ள சதுப்பு நிலத்தில் காட்டு யானையின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

இந்த யானை இறப்பதற்கு முன்னர் பல சந்தர்ப்பங்களில் சிகிச்சை பெற்று வந்ததாகவும்,  மரணத்திற்கான சரியான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை என, வனவிலங்கு திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

யானையின் இறப்புக்கான காரணத்தை அறிய பிரேத பரிசோதனை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹம்பேகமுவ காவல் பொலிஸ் அதிகாரிகள் வனவிலங்கு திணைக்கள அதிகாரிகளுடன் இணைந்து மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X