Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2020 ஜனவரி 30 , பி.ப. 03:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
புதிதாக நியமிக்கப்பட்டுள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுவில் இருந்து தன்னை நீக்கியமை குறித்து தனக்கு அறிவிக்கப்படவில்லை என, நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி.பெரேரா தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக் கூறியுள்ளார்.
தன்னை செயற்குழுவில் இருந்து நீக்குவதற்கு எந்தவிதமான காரணங்களும் இல்லையென்றும், ஒழுக்காற்று நடவடிக்கை எதுவும் முன்னெடுக்கப்படவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
புதிதாக நியமிக்கப்பட்டுள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுவில் இருந்து பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா மற்றும் அஜித் பி.பெரேரா ஆகியோர் நீக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அத்துடன், ஐக்கிய தேசிய கட்சியின் புதிய செயற்குழுவில் இருந்து கொழும்பு மேயர் ரோஸி சேனாநாயக்க மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாகிர் மாகார் ஆகியோர் நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .