Editorial / 2020 ஜனவரி 22 , பி.ப. 03:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியினர் தமது செயற்பாடுகளுக்கான பலனை தற்போது, அனுபவிப்பதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று (22) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக் கூறினார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவாளர்கள் வாக்களித்து உருவாக்கிய அரசாங்கத்தில் இணைந்து அமைச்சு பதவிகளை பெற்று சொகுசுகளை அனுபவித்து, இறுதியில் ஐக்கிய தேசியக் கட்சிக்கு எதிராக செயறப்பட்டதாகவும் அவர் குற்றம் சுமத்தினார்.
அவ்வாறு செயற்பட்ட ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியினர் இன்று தமது செயற்பாடுகளுக்கான பலனை தற்போது அனுபவிப்பதுடன், அவர்களை ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவினர் மதிப்பதில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்வரும் தேர்தலில் தோல்வியடைந்து ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது வீட்டிலேயே ஊடகவியலாளர் சந்திப்பை நடத்தும் நிலை ஏற்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
39 minute ago
43 minute ago
48 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
39 minute ago
43 minute ago
48 minute ago
1 hours ago