J.A. George / 2021 ஜூலை 30 , பி.ப. 01:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையில் தற்போது காணப்படும் கொரோனா தொற்று நிலைமை தொடருமாக இருந்தால் கடந்த மே மாத்தில் ஏற்பட்ட அனர்த்த நிலையை நோக்கி நாடு செல்லக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர ஹேமந்த ஹேரத் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்து வருகின்றது.
இந்த நிலையில், அலுலகங்கள் மற்றும் அங்காடி வர்த்தக நிலையங்களில் வைரஸ் தொற்று தொடர்பான விதிகளை ஒழுங்காக கடைபிடிப்பதில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே மக்கள் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வலியுறுத்தினார்.
இதேவேளை, கொரோனா தொற்றில் இருந்து தம்மை பாதுகாத்துக்கொள்ளவதற்கும் கொரோனா தொற்று அதிகரிப்பதை தடுப்பதற்கும் மக்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என, அவர் கேட்டுக்கொண்டார்.
தடுப்பூசி செலுத்த முடிந்தவர்கள் தாமதமின்றி அதனை பெற்றுக்கொள்ள முன்வர வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
13 Dec 2025
13 Dec 2025
13 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 Dec 2025
13 Dec 2025
13 Dec 2025