Mayu / 2026 ஏப்ரல் 01 , பி.ப. 02:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
யாழ்ப்பாணம், பருத்தித்துறை பன்னையம்பதி ஸ்ரீ நாகபூசணி அம்பாள் ஆலயத்தின் வருடாந்த பங்குனி உத்தர பொங்கல் திருவிழா இன்று (01) மிகச் சிறப்பாக நடைபெற்றது.
திருவிழாவின் ஆரம்ப நிகழ்வாக இன்று காலை 8:00 மணியளவில் பருத்தித்துறை சிவன் ஆலயத்திலிருந்து பால்குட பவனி ஆரம்பமானது. நூற்றுக்கணக்கான பக்தர்கள் பக்திப் பரவசத்துடன் பால்குடங்களை ஏந்தி, பன்னக்கட்டை ஊடாகப் பன்னையம்பதி ஸ்ரீ நாகபூசணி அம்பாள் ஆலயத்தை வந்தடைந்தனர்.
விசேட அபிஷேகங்கள்: பால்குட பவனியைத் தொடர்ந்து, அம்பாளுக்கு விசேட அபிஷேக ஆராதனைகளும் பூசைகளும் பக்திபூர்வமாக நடைபெற்றன.
ஆலயத்தின் பிரதம தர்மகர்த்தா ஜெயகோபி தலைமையில் நடைபெற்ற இப்பங்குனி உத்தர பூசைகளில், பருத்தித்துறை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பிரதேசங்களைச் சேர்ந்த பெருமளவிலான மக்கள் கலந்துகொண்டனர். இதன்போது பக்தர்கள் தமது நேர்த்திக்கடன்களை நிறைவேற்றியதுடன், பொங்கலிட்டும் அம்பாளை வழிபட்டனர்.
9 minute ago
44 minute ago
55 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
44 minute ago
55 minute ago
1 hours ago